Showing posts with label Tamil News in london. Show all posts
Showing posts with label Tamil News in london. Show all posts

26 Jun 2016

என்ன நடக்கும் என தெரியாமல் வாக்களித்த பிரிட்டன் மக்கள்! அம்பலப்படுத்திய கூகுள்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்து சென்றால் என்னவாகும் என்று தெரியாமலேயே அப்படி செல்வதற்கு ஆதரவாக மக்களில் பெரும்பாலானோர் ஓட்டு போட்டுள்ளனர்.
கூகுள் டிரெண்ட் மூலம் இந்த தகவல் அம்பலமாகியுள்ளது.
கூகுள் டிரெண்டில் "ஐரோப்பிய யூனியனை விட்டு நாம் வெளியேறினால் என்னவாகும்" என்ற கேள்வியை வாக்கெடுப்பு நடந்த 2 மணி நேரத்திற்கு பிறகு அதிக மக்கள் கூகுளில் கேட்டுள்ளனர்.
இது 250 மடங்கு அதிகம் என்று கூகுள் கூறியுள்ளது.
அதாவது, வாக்கெடுப்பில் ஓட்டு போட்ட பிறகே பெரும்பாலான மக்கள், பிரிந்து சென்ற பிறகு என்னவாகும் என்ற கேள்வியையே கேட்க ஆரம்பித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து இருப்பது தங்களது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல, வளைகுடா நாடுகளில் இருந்து இஸ்லாமிய அகதிகள் தங்கள் நாட்டுக்குள் வருவது அதிகரித்து விட்டது என்ற ஒரே எண்ணம்தான் இப்படி அவர்களை தனிக்குடித்தனத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வைத்துள்ளது என்கிறார்கள் பாதுகாப்பு துறை நிபுணர்கள்.
Share:

பிரித்தானியா விலகுவதற்கான வழிமுறைகள் குறித்து ஒன்றியம் விளக்கம்

பிரித்தானியாவில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட குடியொப்ப வாக்கெடுப்பு தொடர்பான கருத்துக்கணிப்பின் முடிவுகளின் படி, ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலக தீர்மானித்துள்ள நிலையில் முறைப்படி ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை தொடர்பிலான வழிமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் தெளிவுபடுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பதவி விலகவுள்ளதாகவும், அதன் பின்னர் அவரது பொறுப்புக்களை கையேற்பவர் பிரித்தானியா விலகுவது தொடர்பிலான அனைத்து கருமங்களையும் முன்னெடுப்பார் எனவும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என ஒன்றியத்தில் உள்ள தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பில் எப்போது மற்றும் எவ்வாறு பிரித்தானியா உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் என பலர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
மேற்குறித்த நடவடிக்கைகள் 50 ஆவது சட்டப்பரிவில் உள்ளதை போன்று பின்பற்றப்படல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவருக்கு பிரித்தானியாவின் வெளியேற்றம் தொடர்பில் முறைப்படி கடிதம் ஒன்று அனுப்பப்படுதல் அல்லது முறைப்படி ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல் என்பனவே குறித்த சட்டம் ஆகும்.
முறைப்படி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share:

பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் விடுக்கும் அவசர செய்தி !

இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது.
பேஸ்புக்,  போட்டோக்களாலே அதிக வாசகர்களை இணைத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பானது அதனை ஏன் பேக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் உள்பட பலரும் நினைக்கலாம். இந்த புதிய அறிவிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, பேஸ்புக் பயன்படுத்தும் 1.65 மில்லியன் மக்களுக்கும் இது பொருந்தும்.
ஒரு நாளைக்கு பேஸ்புக்கில் லட்சக்கணக்கான போட்டோக்கள் அப்லோடு செய்யப்படுகின்றன.
பேஸ்புக் மொபைல் ஆப்பில் பல்வேறு மாற்றங்கள் குறித்து உங்களுக்கு நோட்டிபிகேசன் வந்திருக்கும்.
எனவே அதன்படி அவர்கள் உங்கள் போட்டாக்களை அழிக்கவுள்ளனர், இதற்கான மாற்றம் உங்கள் மொபைலில் இருந்து துவங்குகிறது.
பேஸ்புக் நிறுவனம் Synced போட்டாக்கள்( Synced Photos) மற்றும் வீடியோக்களை பாதுகாக்க வேண்டுமெனில் புதிதாக Moments என்ற அப்பை டவுன்லோட் செய்து ஜூலை 7ம் தேதிக்கு முன்னதாக log in செய்ய வலியுறுத்தியுள்ளது. இந்த Moments அப் வேண்டாம் என்றால், உங்கள் கணிணியில் போட்டாக்களை டவுன்லோடு செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது. இல்லாவிட்டால் போட்டாக்கள் மற்றும் வீடியோக்கள் அழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளது. Moments அப் மூலம் விரும்பியவர்களுக்கு மட்டும் தனியாக அனுப்பிக்கொள்ளும் வசதியை கொண்டுள்ளது.
sync செய்யப்பட்ட குரூப் போட்டாக்களை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் அனுப்பலாம். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு அனுப்பும் போட்டாக்களை நீங்கள் மட்டுமே காண முடியும். Moments வைத்துள்ளவர்கள் மட்டுமே உங்கள் போட்டாக்களை காண முடியும். இது போன்ற வசதிகள் பேஸ்புக்கின் புதிய Moments அப்பில் உள்ளது.
இச்செய்தியினை அனைவரின் பயன்கருதி பகிரவும்
Share:

22 Jun 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்: தெற்காசிய வாக்குகள் எந்த பக்கம்?

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய ராஜ்ஜியம் தொடர்ந்து நீடித்திருப்பதா அல்லது அதிலிருந்து விலகுவதா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக பிரிட்டனில் நாளை வியாழக்கிழமை (23-06-2016) நடக்கவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கான இறுதிப் பிரச்சாரம் இன்றோடு (22-06-2016) நிறைவடைகிறது. பிரிட்டனில் சுமார் 14.5 லட்சம் இந்திய வம்சாவளியினரும், 11.7 லட்சம் பாகிஸ்தானிய வம்சாவளியினரும் வாழ்கிறார்கள். ஐக்கிய ராஜ்ஜ்ஜியத்தின் இரண்டு பெரிய சிறுபான்மை சமூகங்களாக இவை கணிக்கப்படுகின்றன. பிரிட்டிஷ் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த கருத்தறியும் வாக்கெடுப்பு குறித்து இந்திய மற்றும் பாகிஸ்தானிய வம்சாவளியினரின் கருத்துக்கள் எப்படி இருக்கின்றன?


Share:

கிளிநொச்சியில் குடும்பமொன்று உண்ணாவிரதம்

பல தசாப்தங்களாக குடியிருக்கும் காணியிலிருந்து தம்மை விரட்ட முற்படுவதாக தெரிவித்து கரைச்சி பிரதேச செயலரிற்கு எதிராக குடும்பமொன்று கிளிநொச்சியில் போராட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த போராட்டம் இன்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன் இடம்பெறுகின்றது. கிளிநொச்சி – ஆனந்தபுரத்தைச் சேர்ந்த முத்தையா விஜயநாதன் என்ற குடும்பத்தவர், மனைவி, சிறு குழந்தைகள் மற்றும் முதிய தாயார் ஆகியோருடன் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 1972 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியில் வசித்துவரும் தம்மை அங்கிருந்து வெளியேற்றி, குறித்த காணியை வேறுநபருக்கு வழங்குவதற்கு பிரதேச செயலாளர் முயற்சிப்பதாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். தமது குடியிருப்பு காணிகளை கையகப்படுத்தும் வகையில் பிரதேச செயலர் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள குடும்பத்தினர், பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதங்களையும் பதாகைகளில் காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share:

கனடாவில் இலங்கை இளைஞர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!

கனடாவில் இலங்கையர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று காலை டொரன்டோ பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சீ.பி.சீ செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கனேடிய குடியுரிமையை பெற்ற குறித்த இலங்கையர் தமது இரவு நேர முறைமாற்றல் தொழிலை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் தம்மை, இலங்கையரா? என வினவியதுடன் இலங்கைக்கு திரும்பிச் செல்லுமாறு அச்சுறுத்தியதாகவுதம் தாக்குதலுக்குள்ளான இலங்கையர் குறிப்பிட்டுள்ளார். 20 வயது மதிக்கதக்க சுரேஸ் ஒம்மி என்ற இந்த இலங்கையர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், உலகின் பாதுகாப்பான நாடுகளில் கனடாவும் ஒன்று என நம்பியிருந்த தமக்கு இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான இலங்கை இளைஞர் தெரிவித்துள்ளார்.
Share:

29 May 2016

புலிகளின் தலைவர் இன்னும் இறக்கவில்லை – அமைச்சர் விஜயகலா

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று உயிரிழக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள வார பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியதுடன் அவர் தெரிவித்துள்ள இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் விடுதலைப புலிகளின் தலைவருக்கான மரண அத்தாட்சி சான்றிதழை இன்னும் வழங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

மரண அத்தாட்சிப் பத்திரத்தை காட்டினால் மாத்திரமே தன்னால் பிரபாகரன் இறந்து போனார் என்பதை நம்ப முடியும் எனவும் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
Share:

22 May 2016

பிரித்தானியாவில் பெண்ணொருவர் மர்மமான முறையில் கொலை

பிரித்தானியாவின் Surrey பிரதேசத்தில் அமைந்துள்ள வேபிரிஸ் பகுதியில் சந்தைப்பகுதியின் பின்புறமாக இருந்து 38 வயமான பெண்ணின் சடலம் நேற்று (சனிக்கிழமை) Surrey பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.

 இதேவேளை, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு அருகாமையில் Surrey நிலையத்தில் வைத்து பலமான காயங்களுடன் ஒரு ஆண் கண்டுபிடிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த ஆண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்ட சடலம் யார் என்று அதிகாரபூர்வமாக இனங்காணப்படாத போதிலும், பெண்ணின் உறவினர்கள் கூறிய அடையாளங்களுடன் இணங்கி காணப்படுவதனால் பொலிஸார் அதனைஉறுதி செய்துள்ளனர்.

 பொலிஸ் தலைமைக் கண்காணிப்பாளர் இது தொடர்பில் தெரிவிக்கையில், இது ஒரு சோகமான நிகழ்வு தான். எங்களால் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு என்ன செய்ய முடியுமோ அவை அத்தனையும் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எவ்வாறான போதும், காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஆணுக்கும் குறித்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் இருக்குமா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Share:

யாழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு!

யாழ்ப்பாண மக்கள் நிலத்தடிநீர், தரை மேல் நீர் தொடர்பில் நீண்டகாலமாக பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில் அப்பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐங்கரநேசன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்குதல் மற்றும் வடிகால் சீரமைப்பு, குளங்களை தூர்வாருதல், புனரமைத்தல் போன்ற முக்கியமான விடயங்கள் பற்றி ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மக்கள் நிலத்தடிநீர், தரை மேல் நீர் தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் யாழ்ப்பாண நிபுணர்களினால் ஆராயப்பட்டு அமைச்சருக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வு இன்னும் இரு வாரங்களில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெற்கில் முக்கியத்துவம் கொடுத்து அபிவிருத்திகள் இடம்பெறுவது போல வடக்கிற்கும் அதிகளவில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டாயப் பணிப்பினை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டதக்கது. இந்த பணிப்பை அங்கஜன் இராமநாதனுக்கும் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Share:

வவுனியா மாவட்டத்தில் மட்டும் 66 மதுபான விற்பனைக் கூடங்கள்

184 பாடசாலைகள் உள்ள வவுனியா மாவட்டத்தில் மட்டும் 66 மதுபான விற்பனைக் கூடங்கள் உள்ளதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் உள்ள இரு கல்வி வலயங்களிலும் மொத்தம் 184 பாடசாலைகள் உள்ளன.

ஆனால் இங்கு மொத்தமாக 66 மது விற்பனைக்கூடங்கள் இயங்குகின்றன.இவ்வாறு இயங்கும் குறித்த 66 மது விற்பனை மையங்களிலும் மதுபானச்சாலைகள் வகையில் 14 உள்ளன. அதேபோன்று , 11 ரெஸ்ரூரன்ட்களும் இயங்குகின்றன. இவற்றிற்கு அப்பால் உள்ளூர் கள்ளுத் தவறனைகள் 41ம் இயங்குவதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 89 ஆயிரம் மக்கள் தொகையினைக் கொண்ட இம் மாவட்டத்தில் மொத்தமாக 184 பாடசாலைகளும் சகல தரங்களையும் உடைய 14 வைத்தியசாலைகளும் , உள்ள அதேவேளையில் 61 மது விற்பனை நிலையங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share:

16 May 2016

யாழில் சீரற்ற காலநிலை – 1168 குடும்பங்களைச் சேர்ந்த 5047 பேர் பாதிப்பு

யாழில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 1168 குடும்பங்களைச் சேர்ந்த 5047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இதன்போது யாழ்ப்பாண நகரப்பகுதி, நல்லூர், சண்டிலிப்பாய், வேலனை, உடுவில், தெல்லிப்பளை, பருத்தித்துறை உள்ளிட்ட பல பகுதிகளையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த பகுதிகளிலுள்ள தற்காலிக வீடுகள் பகுதியளவில் சேதடைந்திருக்கின்றன. மேலும், இரண்டு வீடுகள் முழு அளவில் சேதமடைந்துள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதிகளவான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Share:

15 May 2016

பாணந்துறையில் கடும் காற்று: 30 வீடுகள் சேதம்

பாணந்துறையில் வீசிய கடும் காற்றினால் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், தொடர் மழை காரணமாக பாணதுறை – பழைய காலி வீதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Share:

மஹிந்தவின் அரசியல் கிசுகிசு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உபாலி கொடிகார அண்மையில் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார்.
மஹிந்தவின் உகண்டா பயணத்தில் இணைந்து கொள்ள எடுத்த முயற்சியே இதற்கான காரணம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச இந்த உகண்டா விஜயத்தில் இணைத்துக்கொள்ளப்படவிருந்தார், எனினும் கடவுச்சீட்டை நீதிமன்றம் வழங்கவில்லை.
இதனால் யோசிதவிற்கு பதிலாக தம்மை உகண்டா அழைத்துச் செல்லுமாறு மஹிந்தவிடம், முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உபாலி கொடிகார கோரியுள்ளார்.
“சேர் யோசித வரவில்லை என்பதனால் என்னை உங்களுடன் அழைத்துச்செல்லுங்கள்” என உபாலி கொடிகார கோரியுள்ளார்.“நீர் எம்முடன் தாய்லாந்து வந்தீர், தற்போது இங்கும் வரவா பார்க்கின்றீர்?” என மஹிந்த கேள்வி எழுப்பியுள்ளார்.
“அப்படியாயின் டிக்கட் எடுத்துக் கொண்டு உகண்டா வருகின்றேன்” என உபாலி கொடிகார தெரிவித்துள்ளார்.“ விசர் கதை கதைக்காதே ஐசே, இந்தப் பயணத்தில் நீர் இணைந்துகொள்ளப் போவதில்லை தீர்மானித்துவிட்டேன்” என மஹிந்த பதிலளித்துள்ளார்.
“சரி அப்படியென்றால் என்ன செய்வது” என கொடிகார கூறியுள்ளார்.மஹிந்த ராஜபக்ச உகண்டா விஜயம் செய்வதற்கு முன்னதாக இந்த சம்பாசனை இடம்பெற்றுள்ளதாக சிங்கள வார இறுதி பத்திரிகையொன்று அரசியல் கிசுகிசு பகுதியில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மஹிந்த போன்று ஆடையணிந்து மஹிந்தவின் டம்மியாக வாகனத்தில் அங்குமிங்கும் உபாலி கொடிகார பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவின் தீவிர விசுவாசியான உபாலி கொடிகார, புதிய தலைமையை கடுமையாக பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share:

14 May 2016

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக மஹிந்த அணி போர்க்கொடி!

“நாட்டை சூறையாடிய பயங்கரவாதிகளை மே 18இல் நினைவுகூர வடக்கு மாகாண சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு அரசும் இணக்கப்பாடு தெரிவித்துள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.” – இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மே 18ஆம் திகதி முள்ளிவாய்காலில் வடக்கு மாகாண சபை நினைவேந்தல் நிகழ்வை நடத்தவுள்ளது. இதற்கு அரசும் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையிலேயே தினேஷ் குணவர்தன எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு மஹிந்த ஆட்சியில் நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது மீண்டும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டும் வகையில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

எதிர்வரும் மே 18ஆம் திகதி வடக்கு மாகாண சபை முள்ளிவாய்காலில் நினைவேந்தலை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளமைக்கு அரசு பூரண அனுமதி வழங்கியுள்ளது. வடக்கு மாகாண சபையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் சமஷ்டிக் கோரிக்கைக்கும் அரசின் பூரண ஆதரவு உள்ளது. நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்கும் வடக்கு மாகாண சபை தொடர்பில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” – என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share:

ஈழத்தமிழன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான்

•இவர்கள் பிழைக்க தெரியாதவர்கள் இல்லை!

செய்தி- லண்டன் வந்த ஜனாதிபதி மைத்திரிக்கு கொட்டும் மழையிலும் தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவர்கள் விரும்பியிருந்தால்,

•வேலைக்கு போய் ஆகக் குறைந்தது 50 பவுண்ஸ்( 10 ஆயிரம் ரூபா) உழைத்திருக்க முடியும்

•அல்லது தியேட்டருக்குப் போய் சூரியா படம் பார்த்திருக்க முடியும்

•அல்லது பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு சொப்பிங் போயிருக்க முடியும்

•அல்லது குடும்பத்துடன் கோயிலுக்கு போயிருக்க முடியும்

•அல்லது வீட்டில் இருந்துகொண்டு டிவி யில் சுப்பர் சிங்கர் பார்த்திருக்க முடியும்
.
•அல்லது தண்ணியடித்து பாபர்கியூ போட்டு சாப்பிட்டிருக்க முடியும்

இதையெல்லாம் செய்யாமல் கொட்டும் மழையில் ஜனாதிபதி மைத்திரிக்கு எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்?

இவர்கள் மற்றவர்கள் போல் பிழைக்க தெரியாதவர்களா?

இல்லை. நிச்சயமாக இல்லை.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நம்பிக்கையுடன் போராடுகிறார்கள்.

பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்தாலும் தமிழ் இனம் அடிமையாக உறங்கிக் கிடக்காது என்பதை காட்டுகிறார்கள்.

ஒரு சிலருக்கு எதிர்க்ட்சி தலைவர், மாகாண முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை கொடுத்தாலும் மொத்த தமிழ் இனத்தையும் வாங்க முடியாது என்பதை காட்டுகிறார்கள்.



புலத்தில் இருந்தாலும் தமது உறவுகளுக்காக போராட தயங்கமாட்டோம் என்பதைக் காட்டுகிறார்கள்.

நியாயம் கிடைக்கும் வரை தமிழன் ஓயமாட்டான் என்பதை முழு உலகிற்கும் காட்டுகிறார்கள்.

இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் இவர்கள் சொல்லியிருக்கும் செய்தி நிச்சயம் கனதியானது.


போராட்டம் இன்றேல் வாழ்க்கை இல்லை- தோழர் லெனின்.


தாயகத்தின் இறுதிவீரன் இருக்கும்வரை விழமாட்டார் வீரப்புலிகள்

தமிழீழ தேசிய தலைவரின் சிந்தனைகளில் இருந்து…

எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றானர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.

எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு. எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீ சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

Share:

லண்டனில் உள்ளவர்களுக்கு புதுச் சட்டம்…!

ஐக்கிய இராச்சியத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் புதிய குடிவரவுச் சட்டமொன்று ( Immigration Act 2016) அமுலுக்கு வந்துள்ளது.
இச்சட்டமானது அந்நாட்டுக்கு குடிபெயர்ந்து நிரந்தர வதிவுடமை மற்றும் பிரித்தானிய குடியுரிமை பெறாதோர் தொடர்பிலான பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது.
முக்கியமாக அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அந்நாட்டின் நலன்புரி சேவைகளை அணுகுதல், வேலை செய்தல், வங்கிக் கணக்குகளை கையாளுதல், வாகன அனுமதிப் பத்திரங்களை எடுத்தல் மற்றும் வாடகைக்கு வீடுகளை எடுத்தல் தொடர்பில் மிகக் கடுமையான விதிமுறைகளைக் கூறுகின்றது .
1-இச்சட்டத்தின்படி பிரித்தானியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து வேலை செய்வது குற்றமாகும்.
2-சட்டவிரோதமாக தங்கியுள்ளோருக்கு வேலைகொடுக்கும் வேலை தருனர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்தல்.
3-வீட்டு உரிமையாளர்கள் தம்மிடமுள்ள வீடுகளை வாடகைக்கு எடுப்பவருக்கு வதிவிடவுரிமை இருக்கின்றதா என பரிசீலிப்பதற்கான உரிமையை வழங்குகின்றது .
4-குடிவரவு அமுல்படுத்தல் அதிகாரிகளுக்கு சந்தேகநபர் தொடர்பில் அவரது உடைமைகள் மற்றும் வசிப்பிடத்தில் சோதனை செய்வதற்கும் அவரது அடையாளத்தை உறுதிசெய்யும் ஆவணங்களைக் கைப்பற்றிக் கொள்வதற்குமான உரிமையைக் கொடுக்கின்றது.
5-பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு குற்றவாளிகளுக்கு இலத்திரனியல் செருகிகளைப் பூட்ட (Electronic Tag) உரிய அதிகாரிகளுக்கு உரிமையை வழங்குகின்றது .
6-அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஆதரவற்ற நிலைமையிலுள்ள நபர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது .
7-பிரித்தானியாவில் தொடர்ந்துவரும் குடிவரவு நெருக்கடியை கருத்தில் கொண்டு பிரித்தானியாவுக்குள் நுழைந்த அநாதரவான சிறுவர்களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
8-ஐரோப்பிய ஒன்றிய நாடுகளல்லாத வெளிநாட்டு திறமைசாலிகளை வேலைக்கமர்த்தும் தொழில் வழங்குனர்களுக்கு தீர்வை விதிக்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
9-வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணும் பொதுச் சேவையிலுள்ளோர் சரளமாக ஆங்கில மொழியைப் பேசுபவர்களாக இருத்தல் வேண்டும்.
10-சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை நாடுகடத்துவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குடிவரவுச் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்கு கூடுதலான அதிகாரங்களைக் கொடுக்கின்றது.
போன்ற வரையறைகள், கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.
Share:

ஐ.எஸ்அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர் நாடு கடத்தப்பட்டார்!

ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் சட்ட விரோதமான முறையில் தொடர்பு வைத்திருந்த இரண்டுரஷ்யர்கள் மற்றும் இலங்கையர் ஒருவர் சேலங்கூர் பகுதியில் மார்ச் 28 மற்றும்ஏப்ரல் 22ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கைது செய்யப்பட்டு அவர்களுடைய நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்கள் என்று மலேசிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மூவரும் சீலங்கூர் சிறப்பு இராணுவ அதிகாரியால் கைது செய்யப்பட்டுள்ளனர் என மலேசிய பிரதி பொலிஸ் மா அதிபர் டேன் கலிட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் சட்டவிரோதமான முறையில் ஈடுபட்டு வந்த 25மற்றும் 28 வயதையுடைய இரண்டு ரஷ்ய பிரஜைகள் முதலில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிய ஐ.எஸ் தீவிரவாதத்தின் உறுப்பினர்கள் என்று இந்த இருவர்களும் சந்தேகத்தின் பேரில் துருக்கி அதிகாரிகளால் இந்த வருடம் பெப்ரவரி மாதம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் துருக்கியில் இருந்து மார்ச் மாதம் மலேசியாவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் 2012ம் ஆண்டுக்கான சட்டத்தின் படி குற்ற பாதுகாப்புபிரிவின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் இலங்கையர் கிள்ளான் பள்ளத்தாக்கில் தொலைக்காட்சி தொழிநுட்பவியலாளராக பணியாற்றும் 42வயதுடையவர் என்று கலிட் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேக நபர் தன்னுடைய முகப்புத்தக கணக்கில் இலங்கையின் ஜனாதிபதி மற்றும்பிரதமரை கொலை செய்வதாக அச்சுறுத்தி தரவு ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.
இலங்கையிலேயே தேடப்படும் பட்டியலில் குறித்த நபர் உள்ளடங்குகின்றமைகுறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர் குடிவரவு சட்டம் 6ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மலேசியஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் ஏப்ரல் 27ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு பொலிஸ் அதிகாரிகளின்தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று மலேசிய பிரதி பொலிஸ் மா அதிபர்டேன் கலிட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
உயர் ஆபத்து நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்கள் குறித்து முழுகண்காணிப்புடன் இருக்குமாறு மலேசிய குடிவரவு திணைக்கள பொலிஸ் அதிகாரிகளிடம்கலிட் கூறியுள்ளார்.
Share: