Showing posts with label Tamil Eelam. Show all posts
Showing posts with label Tamil Eelam. Show all posts

22 Jun 2016

2050ல் லண்டனில் முஸ்லீம் தான் ஆட்சி செய்வார்கள்- பெரும் சர்சையை கிளப்பும் போட்டோ.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறவேண்டும் என்று கூறும் ஒரு பெரும் அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறித்த அமைப்பிற்க்கு 27 மில்லியன் பவுன்டுகள் இதுவரை நிதி உதவி கிடைத்துள்ளதால் பிரித்தானிய பிரதமர் அலுவலகமே ஆடிப்போயுள்ளது என்கிறார்கள். அதாவது அரசாங்கத்தால் கூட இவ்வளவு பெருந்தொகைப் பணத்தை திரட்ட முடியாது உள்ளது. பிரித்தானியா ஐரோப்பிய நாடுகளோடு இணைந்திருக்க வேண்டும் என்று பரப்புரை செய்ய அரசாங்கத்தால் கூட 27 மில்லியனை ஒதுக்க முடியாது. அந்த அளவுக்கு பல செல்வந்தர்கள், பிரித்தானியா வெளியேறவேண்டும் என்ற கொள்கைக்கு ஆதரவு கொடுத்துள்ளார்கள். இது இவ்வாறு இருக்க, பெரும் பண முதலையான பெண் ஒருவர் இருக்கிறார். அரபெல்லா ஆக் வயிட் என்னும் இப்பெண்மணி பெரும் செல்வந்தர் ஆவார். அவர் தனது ரிவீட்டரில் 2050ம் ஆண்டு பிரித்தானியா முழுவதும், முட்டாக்கு அணிந்த முஸ்லீம் பெண்கள் செல்வது போலவும். அங்கே ஒரே ஒரு ஆங்கிலப் பெண் , இருப்பது போலவும் ஒரு படத்தை வெளியிட்டு பெரும் சர்சையில் சிக்கிக்கொண்டுள்ளார். அப்படத்தில் உள்ள ஆங்கிலப் பெண்மணி பாட்டியே ஏன் இதனை நீங்கள் தடுக்கவில்லை என்று கேட்பது போல வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிரித்தானிய மகாராணியை(பாட்டி என்று அழைப்பது) குறிப்பது போல உள்ளது. நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகவேண்டும் என்று அன்றே கூறி இருந்தால் தற்போது இன் நாட்டை முஸ்லீம்கள் ஆளவேண்டி வந்திருக்காதே என்ற பொருள்பட இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
Share:

முதல் குழந்தைப் போராளி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளியை அடுத்த இதழில் அறிமுகம் செய்கிறேன் – என்று சென்றவாரம் எழுதியிருந்தேன். இளம் இயக்குநர் உதயபாரதியின் ‘பாலாறு’ திரைப்படத்தைப் பார்த்த உடனேயே ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பின் எதிர்விளைவுதான் அது. அப்படி நான் எழுதியதற்கும் உடனடி எதிர்விளைவு இருந்தது. விவரம் தெரிந்த நண்பர் ஒருவர், கட்டுரையைப் படித்தவுடனேயே தொடர்பு கொண்டார். தொடக்கக் கால போராளி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவர்தானே அந்தக் குழந்தைப் போராளி’ என்று அவர் கேட்க, ‘இல்லை’ என்று நான் மறுக்க வேண்டியிருந்தது. ‘முதல் குழந்தைப் போராளி’ என்று நான் எழுதவில்லை. ‘தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளி’ என்று தான் எழுதியிருந்தேன். ‘விடுதலைப் புலிகள் இயக்கத்தில் குழந்தைப் போராளிகள் இருந்தார்கள்’ என்று இட்டுக்கட்டிச் சொல்வதிலேயே பொழுதைக் கழிப்பவர்களுக்காகத்தான் அப்படி எழுதினேன். நண்பர்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். நான் எழுதியதிலிருக்கும் எந்த வார்த்தையையும் விட்டுவிடக்கூடாது. ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு முன்பே, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே, குழந்தைப் போராளிகளின் பெயர்கள் பதிவாகியிருக்கின்றன. பின்னோக்கி இன்னும் இரண்டு எட்டு எடுத்துவைத்தால், வள்ளியம்மை என்கிற குழந்தையின் உருவம் கண்ணில் படுகிறது. மகாத்மா காந்திக்கே விடுதலை உணர்வை ஊட்டிய குழந்தைப் போராளியான தில்லையாடி வள்ளியம்மை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது எவரும்! ‘பலன் எதையும் எதிர்பாராமல், தியாகத்துக்குத் தயாராக இருந்த வள்ளியம்மைதான் முதல்முதலில் எனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்….! என் சகோதரர் லட்சுமிதாஸ் காந்தியின் மரணம் கூட இந்த அளவு என்னை பாதிக்கவில்லை… வள்ளியின் மரணம் உண்மையிலேயே எனக்குப் பேரிடி’ என்று வள்ளியம்மை இறந்தபோது நாத்தழுதழுக்கக் குறிப்பிட்டார் காந்திஜி. ”ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காமல் கடமையைச் செய்தவள் வள்ளியம்மை. இந்தியாவின் புனித மகள் ஒருத்தியை இழந்துவிட்டோம்” என்று, தனது ‘இந்தியன் ஒப்பினியன்’ பத்திரிகையில் உருகி உருகி எழுதினார். காந்திஜியின் வார்த்தைகள் அவரது அடிமனத்திலிருந்து வெளிப்பட்டவை என்பதை, தமிழகத்துக்கு அவர் வந்திருந்தபோது உணரமுடிந்தது. தனது ஆதர்சமான வள்ளியை இதயத்தில் சுமந்தபடி, சாலை வசதிகள் அதிகம் இல்லாத தில்லையாடிக்குச் சென்றார். அந்தக் குழந்தை பிறந்த புனித மண்ணில் கண்ணீர் மல்க நின்றார். தஞ்சாவூர் அருகில் இருக்கிறது தில்லையாடி கிராமம். அந்த ஊரைச் சேர்ந்தவர், வள்ளியம்மையின் தாயார் மங்களம். புதுச்சேரியைச் சேர்ந்த அவரது கணவர் முனுசாமி முதலியார், மனைவியின் ஊரிலேயே தங்கி, நெசவுத் தொழில் செய்தவர். அந்நிய (பிரிட்டிஷ்) துணி மோகத்தால், உள்ளூர் நெசவுத் தொழில் நசுங்கிவிட, கர்ப்பிணி மனைவியுடன் பஞ்சம் பிழைக்க தென் ஆப்பிரிக்கா சென்றுவிட நேர்ந்தது. தென் ஆப்பிரிக்காவில்தான் பிறந்தாள் – வள்ளியம்மை. தனது உறுதியான போர்க்குணத்தால், அங்கேயே இறந்தாள். இறுதிவரை, அவள் தன் தாய்மண்ணைத் தரிசிக்கவேயில்லை. அந்த மண்ணைத் தானாவது தரிசிக்க வேண்டுமென்று நினைத்திருக்க வேண்டும் காந்திஜி. தென் ஆப்பிரிக்க வெள்ளையர்களுக்கு, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்கிற பெயரே அருவருப்பாக இருந்த ஒரு தருணத்தில், அவரை முழுமையாகப் புரிந்து வைத்திருந்தாள் வள்ளி. காந்தி நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டங்களை இனவெறி பிடித்த வெள்ளையர்கள் அறவே விரும்பவில்லை. அப்படியொரு போராட்டத்தின் போது, வெள்ளையன் ஒருவன் தனது துப்பாக்கியால் காந்தியைச் சுட முயன்றான். அருகிலிருந்து அதைப்பார்த்த வள்ளி ஓடிவந்து காந்திஜிக்கு முன்னால் நின்றுகொண்டதும், ‘இப்போது சுடு’ என்று அந்தச் சிறுமி சொன்னதைக் கேட்டு வெட்கப்பட்டு அந்த வெள்ளையன் திரும்பியதும் அந்தக் குழந்தைப் போராளியின் வீர வரலாறு. தென் ஆப்பிரிக்காவில் வசித்த இந்தியர்களுக்கு, அந்த நாட்டின் இனவெறி அரசு மனிதத் தன்மை சிறிதுமின்றி தலைவரி விதித்தது. 1913ல், தலைவரியை எதிர்த்து காந்தி நடத்திய அறப்போர்ப் பேரணியில் தாயுடன் கலந்துகொண்டாள் வள்ளியம்மை. ஜோகன்னஸ்பர்க் நகரில் பேரணி தொடங்கியபோது, முதல் வரிசையில் கஸ்தூரிபா காந்திக்கு அருகில் நின்றிருந்தார்கள், வள்ளியம்மையும் தாயும்! நியூகாசில் நகர் வழியாக பேரணி டிரான்ஸ்வால் எல்லைக்குள் நுழைந்தபோது, பேரணியில் வந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். வள்ளியம்மையும் கைதானாள். அப்போது அந்தக் குழந்தைப் போராளிக்கு, 15 வயது. காந்திஜி, வள்ளியம்மை உள்பட கைது செய்யப்பட்ட அனைவருக்கும் 3 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மாரிட்ஸ்பர்க் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். அது ஒரு நவீன நரகம். மிகமிக மோசமாகப் பராமரிக்கப்பட்டு வந்த சிறை. படுமோசமான சுகாதாரக் கேடு, சிறையைச் சாக்கடை நிலையில் வைத்திருந்தது. அப்படியொரு சிறைச் சூழலில், கைது செய்யப்பட்ட பலரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். வள்ளியம்மையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டாள். அவளது உடல்நிலை மோசமடைந்தபடியே இருந்தது. அதைப் பார்த்து அஞ்சிய சிறை அதிகாரி, அவளை விடுவிப்பதாக காந்தியிடம் கூறினான். ‘அபராதம் கட்டிவிட்டு அந்தச் சிறுமி வெளியே போகட்டும்’ என்றான் அவன். அந்த உடல்நிலையிலும் ஓர்மத்துடனிருந்த அந்தக் குழந்தை, அதை ஏற்க மறுத்துவிட்டாள். “அபராதம் கட்டுவது சத்தியாகிரகப் போராளிக்கு இழுக்கு. செத்தாலும் சிறையில்தான் சாவேன்” என்று, காந்திஜிக்கே சத்தியாகிரகப் போராட்ட நெறிகள் குறித்து போதித்தாள் அந்தக் குழந்தை. அது காந்திஜியின் இதயத்தில் ஆழப்பதிந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் தான் கைது செய்யப்பட்ட போதெல்லாம், காந்திஜி ஓர்மத்துடனும் உறுதியுடனும் இருக்க முடிந்ததென்றால், வள்ளியம்மை தான் அவருக்கு வழிகாட்டி. வரலாற்றின் வழி நாம் இதை அறிய முடிகிறது. அபராதம் கட்டி வெளியே போக மறுத்து சிறையிலேயே இருந்த வள்ளியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. கந்தல் துணி மாதிரி கிடந்த அவளது அருகில் அமர்ந்து, ‘கஷ்டமாக இருக்கிறதா’ என்று கவலையுடன் கேட்டார் காந்தி. அந்த நிலையிலும் உறுதியிழக்காமல் பேசினாள் அந்தக் குழந்தை. “தன் தாய்நாட்டின் கௌரவத்தைக் காக்க உயிர் நீப்பதை கஷ்டம் என்று நினைத்து விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா” என்று கேட்டாள் அந்தக் குழந்தைப் போராளி. அடுத்த சில தினங்களில் அவள் இறந்தாள். இறந்தபோது, அந்தச் சிறுமிக்கு பதினாறே வயது! காந்திஜியின் அந்தப் போராட்டத்தால்தான் தலைவரி ரத்து செய்யப்பட்டதாகச் சொல்கிறது வரலாறு. உண்மையில் அது காந்திஜியின் போராட்டம் மட்டுமல்ல, வள்ளியம்மையின் போராட்டமும்! வெள்ளை அரசாங்கம், அந்தச் சிறுமியின் ஓர்மம் கண்டு அதிர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. “எவருடைய தியாகத்தால் பலன் கிடைத்தது என்று எவராலும் சொல்ல முடியாது. ஆனால், வள்ளியின் தியாகம் நிச்சயமாகப் பலனளித்தது” என்று வெளிப்படையாகச் சொன்னார் காந்திஜி. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வள்ளியம்மை என்கிற சிறுமிக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வையும், அஞ்சாமையையும், ஓர்மத்தையும், உறுதியையும் தான், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தங்கள் தாய்மண்ணுக்காகப் போராடிய எங்கள் ஈழத்து இளைஞர்கள் தாங்கி நின்றார்கள். வள்ளியம்மையைப் போற்றுகிற நாம், ஈழத்தின் வேர்களிலிருந்து வெடித்துக் கிளம்பிய அந்தக் குழந்தைகளை எப்படிப் போற்றாமல் இருக்க முடியும்? அதனால்தான், ‘அது சரி – இது தவறு’ என்று கூசாது பேசுபவர்களின் பெட்டைப் புலம்பல்களைக் காது கொடுத்துக் கேட்கக்கூட கூசுகிறது எனக்கு! நேருவின் மகள் இல்லை வள்ளியம்மை. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நெசவுத் தொழிலாளியின் மகள். அந்தக் குழந்தை தான், மகாத்மா காந்தியின் போர்க் குணத்தைக் கூர்மைப்படுத்தினாள். பெருமையுடன் இதைப் பறைசாற்றுகிற போது, நேருவின் மகளான இந்திரா பிரியதர்ஷினி என்கிற குழந்தைப் போராளியையும் கவனிக்கத் தவறிவிடக் கூடாது நாம். சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில், சிறுமி இந்திரா தலைமையிலான ‘வானர சேனை’ ஈடுபட்ட போது, இந்திராவுக்கு வயது 12 தான்! அந்தச் சிறுமியின் தலைமையில் இயங்கிய வானரங்கள், ஆர்ப்பாட்டங்கள், கொடி ஊர்வலங்கள் என்று கலக்கிக் கொண்டிருந்தன. ஆங்கிலேய அரசுக்கு எதிராக தேசத் தலைவர்கள் எழுதி – தடை செய்யப்பட்ட பிரசுரங்களை – மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர்கள் இந்த வானரங்கள்தான்! 12 வயது இந்திராதான் அவர்களுக்குத் தலைவி என்றால், அதிலிருந்த மற்ற வானரங்களுக்கு என்ன வயது இருக்கும் என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்! 1917 நவம்பர் 19ல் பிறந்தவர் இந்திரா. 1930ல், நேருவின் வீடு ரகசிய போலீசாரின் கடுமையான கண்காணிப்பில் இருந்தது. வீட்டிலிருந்து எதுவும் வெளியில் போகவும் முடியாது, உள்ளே வரவும் முடியாது. அப்படியொரு கடுமையான கண்காணிப்புக்கிடையில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரிவாகவும் விளக்கமாகவும் நேரு எழுதிக் கொடுத்த திட்டம் சிறுமி இந்திரா மூலம் வெளியிலிருந்தவர்களுக்குக் கிடைத்தது. தனது பள்ளிப் புத்தகப் பையில் அதை மறைத்து எடுத்துச் சென்று, சேர வேண்டியவர்களிடம் சேர்ப்பித்தது, அந்தக் குழந்தைப் போராளி தான்! இந்திராவுக்கு முன்பும் ஒரு வரலாறு இருக்கிறது. ஜான்சிக்கு ராணியாவதற்கு முன், சின்னஞ் சிறுவயதிலேயே ஆயுதப் பயிற்சி பெற்றவள், சிறுமி மணிகர்ணிகா. காலாகாலத்துக்கும் தமிழகப் பெண்களின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழும் வீரமங்கை வேலு நாச்சியார், சின்னஞ்சிறு வயதிலேயே ஆயுதப் பயிற்சி பெறத் தொடங்கியவர். உலக வரலாற்றின் வழிநெடுக குழந்தைப் போராளிகளைப் பார்க்க முடிகிறது. நான் அவர்கள் அத்தனைப் பேரையும் நினைவு கூரவில்லை இங்கே! தம் இனத்தின் அடிமை விலங்கொடிக்க எந்த அர்ப்பணிப்புக்கும் தயார் என்கிற ஓர்மத்தைத் தங்கள் கருவிலேயே ஏந்தியிருந்த குழந்தைகளை – சிறுமிகளைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். நாயினும் கேடுகெட்ட அடிமைகளாக இருக்க மனமுவந்து முன்வருபவர்களும், தங்களுடைய அடிமைச் சங்கிலியைத் தாங்களே தயாரித்துக் கொள்பவர்களும், இத்தகைய குழந்தைப் போராளிகளைக் கொச்சைப்படுத்துவது மாதிரி பேசுவதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் விடுதலைக்காக மட்டுமல்ல, இவர்களது விடுதலைக்காகவும்தான் போராடியிருக்கிறார்கள் அந்தக் குழந்தைப் போராளிகள். முள்ளிவாய்க்காலில், ராணுவ மிருகங்களால் அழைத்துச் செல்லப்படும் ஓர் இளம் பெண் போராளி, தனது பெற்றோரையோ உறவினர்களையோ பார்த்துக் கதறுகிற காட்சி கண்முன் விரிகிற போதெல்லாம் உடைந்து போகிறேன் நான். அந்தப் பிள்ளைகள் மற்றவர் மண்ணைப் பறிப்பதற்காகப் போராடியவர்களில்லை. தங்களது சொந்த மண்ணை மீட்கப் போராடியவர்கள். அந்தப் பிள்ளைகளின் அர்ப்பணிப்பை மறந்துவிட்டு, ‘இனப்படுகொலை’ என்கிற உண்மையை உரைக்கக்கூட அஞ்சி நடுங்குகிற ஒரு கோழைச் சமுதாயமாக நாம் மாறிவிட்டோமே என்கிற மனக் கவலையில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு குழந்தையும் இறைவனின் செய்தியோடு தான் வருகிறது – என்பது எந்த அளவுக்கு உண்மை என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், ‘அடிமையாகவே பிறந்தோம், அடிமையாகவே கிடந்தோம், அடிமையாகவே இறப்போம்’ என்கிற மலட்டு மனப்பான்மையிலேயே மூழ்கியிருந்த மூத்தோருக்கு, ‘விடுதலையின் விலை’ என்ன என்பதை தங்கள் அர்ப்பணிப்பால் உணர்த்திய ஒவ்வொரு குழந்தையும் இறைவனின் செய்தியோடுதான் வந்திருக்க வேண்டும். அந்தச் செய்தியோடு தான் வென்றிருக்க வேண்டும். ஒரு பதின்மூன்று வயதுக் குழந்தையின் கையில் பிஸ்கட் கொடுத்து, ‘பாயின்ட் பிளாங்க் ரேஞ்ச்’-ல் அந்தக் குழந்தையை நிற்கவைத்து, ஒரு பொறுக்கி ராணுவம் சுட்டுக் கொல்லலாம்….. அமெரிக்கா முதல் இந்தியா வரை அந்தப் பொறுக்கிகள் மீது விசாரணை வந்துவிடாதபடி பார்த்துக் கொள்ளலாம்……. எத்தகைய துரோகம் இது? ‘குழந்தைப் போராளிகள்’ என்று வாய்கிழியப் பேசியவர்கள், அந்தப் பச்சிளங் குழந்தையின் படுகொலைக்கு நீதி கிடைக்க ஒரு துரும்பையாவது தூக்கி வைத்திருக்கிறார்களா? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் குழந்தைப் போராளி யார் என்பதைத் தெரிந்துகொள்பவர்கள், விரும்பியேற்ற அந்த ஆபத்தான வாழ்க்கையில் அந்தக் குழந்தைகள் முழுமையாகவும் மனமொன்றியும் தங்களை எப்படி ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்பதை உணர்ந்துகொள்வார்கள். “தன் தாய்நாட்டின் கௌரவத்தைக் காக்க உயிர் நீப்பதை கஷ்டம் என்று நினைத்து விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா” என்று கேட்டாளே வள்ளியம்மை…. அந்தக் குழந்தையின் குரல்தான், ஈழத்தில் போராடிய இளைஞர்களின் குரலாகவும் இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் குழந்தைப் போராளி, ஏழாம் வகுப்பு படிக்கும்போது (12 வயது?) வெடிகுண்டு தயாரித்தவன்……. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் குழந்தைப் போராளி, 16 வயதிலேயே பாதுகாப்புப் படைகளால் தேடப்பட்டதால் தலைமறைவானவன்…… தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் குழந்தைப் போராளி, 18 வயதில் ஒரு வியக்கத்தக்க இயக்கத்துக்கு வித்திட்டவன்…… அவன் – வேலுப்பிள்ளை பிரபாகரன்.
Share:

29 May 2016

தொடரும் இராணுவ கெடுபிடி! தவிக்கும் முல்லைத்தீவு மக்கள்!

இலங்கையின் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு , வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மக்கள் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர். இவர்கள் 2014ஆம் ஆண்டு கோப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் மீளக் குடியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் இராணுவத்தினர் தமது பாரம்பரிய காணிகளை கையகப்படுத்தி அவர்களுக்கு தேவையான கட்டடங்களை நிர்மாணித்து வருவதாக தற்போது தகவல்  வெளிவந்துள்ளது. குறிப்பாக பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மாதிரிக் கிராமத்தில் குடியமர்த்தப்பட்டமையால் தமது வாழ்வாதாரமும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே வேளை பல குடும்பங்கள் தமது காணிகளை மீட்ப்பதற்காக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் எனினும் இராணுவத்தினர் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை கைவிடவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Share:

22 May 2016

கொழும்பில் வெள்ளம், காரணம் என்ன? விளக்குகின்றார் அதிகாரி

மழைக்காலங்களில் ஆறுகள் விரிவாக ஓடுவதற்கான நிலங்கள் குறைவடைதல், சட்டவிரோத கட்டடங்களை அமைத்தல், குப்பைகளை கொட்டுவதற்கு முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை மற்றும் செயற்றின் அற்ற வடிகான் அமைப்பு முறையே கொழும்பு புறநகர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் புறநகர் பிரதேசங்களான களனி, உருகொடவத்தை, வெல்லம்பிட்டிய உள்ளிட்ட களனி ஆற்றை அண்மித்த பல பிரதேசங்கள் கடந்தவாரம் பெய்த கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியது.
சுமார் 27 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் வெள்ளம் இதுவரை முழுமையாக வடிந்தோடாத நிலையில் அரசாங்கமும், பொது அமைப்புகள் மற்றும் பொது மக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தாழ்நிலப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் டி.பி.அல்விஸ் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
நகரை அண்மித்த வடிகான்களில் ஏற்பட்ட அடைப்பு வெள்ள நீர் ஆறு மற்றும் கடலை சென்றடைவதில் தடையை ஏற்படுத்தியதாகவும் அவர் குறி்ப்பிட்டுள்ளார்.
கால்வாய்கள் ஆறு மற்றும் கடல் மட்டத்தை விடவும் குறைந்த உயரத்தில் காணப்படுவதால் நீர் வெளியேற்றத்தில் தாக்கம் செலுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சதுப்பு நிலங்கள் அபிவிருத்திப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றமை வெள்ளப்பெருக்கு எறபடுவதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சதுப்பு நிலங்கள் மற்றும் ஆற்றை அண்மித்த நிலங்களில் அமைக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் வேறு கட்டடங்களே, களனி பிரதேசத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கிற்கு காரணமென டி.பி.அல்விஸ் தெரிவித்துள்ளார்.
27 வருடங்களுக்கு பின்னர் முதன் முறையாக களனி ஆற்றின் நீர்மட்டம் அசாதாரணமாக 7.3 அடிக்கு உயர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 1989ஆம் ஆண்டு ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் களனி ஆற்றின் நீர் மட்டம் 7.8 அடியாக உயர்ந்ததோடு, இதனால் கொழும்பில் 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share:

வவுனியா மாவட்டத்தில் மட்டும் 66 மதுபான விற்பனைக் கூடங்கள்

184 பாடசாலைகள் உள்ள வவுனியா மாவட்டத்தில் மட்டும் 66 மதுபான விற்பனைக் கூடங்கள் உள்ளதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் உள்ள இரு கல்வி வலயங்களிலும் மொத்தம் 184 பாடசாலைகள் உள்ளன.

ஆனால் இங்கு மொத்தமாக 66 மது விற்பனைக்கூடங்கள் இயங்குகின்றன.இவ்வாறு இயங்கும் குறித்த 66 மது விற்பனை மையங்களிலும் மதுபானச்சாலைகள் வகையில் 14 உள்ளன. அதேபோன்று , 11 ரெஸ்ரூரன்ட்களும் இயங்குகின்றன. இவற்றிற்கு அப்பால் உள்ளூர் கள்ளுத் தவறனைகள் 41ம் இயங்குவதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 89 ஆயிரம் மக்கள் தொகையினைக் கொண்ட இம் மாவட்டத்தில் மொத்தமாக 184 பாடசாலைகளும் சகல தரங்களையும் உடைய 14 வைத்தியசாலைகளும் , உள்ள அதேவேளையில் 61 மது விற்பனை நிலையங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share:

இலங்கைக்கு வந்த கப்பலில் யுத்த ஆயுதங்கள் ? அதிர்ச்சியில் இலங்கை?

இலங்கையில் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவிலிருந்து இரண்டு கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இந்நிலையில் இக்கப்பல்களில் நிவாரணங்களுக்கு பதிலாக ஆயுதங்கள் வந்திரங்கியுள்ளதாக அதிர்ச்சியான தகவல் ஒன்று கசிந்துள்ளது.
அதாவது இவ்வெள்ள அனர்த்தத்தினை தனக்கு சாதமாக்கிக் கொண்டுள்ள இந்தியா மறைமுகமாக கப்பல்களில் ஆயுதங்களை கொண்டவந்துள்ளதாக இரகசிய தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
சிறீலங்காவுக்கான நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கப்பல்கள்!
இந்திய சீனாவிற்கு இடையிலான ஆயுதப்போரில் சீனாவை வெற்றிக்கொள்ள இலங்கையை தளமாகக்கொண்டு செயற்பட இந்தியா ஆரம்பித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அனுதாபத்தின்போது, இந்தியா எப்போதும் இலங்கை மக்களுக்கு உதவத் தயாராக இருப்பதோடு, அவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என இந்திய பிரதமர் தெரிவித்திருக்கின்ற நிலையில் , அவரின் மேற்பார்வையின் கீழ் இவ்செயற்பாடு இடம்பெற்றுவருதாக தகவல் கசிந்துள்ளது.
அத்துடன் சிறீலங்கா அரசாங்கம் உதவுமாறு விடுத்த கோரிக்கையின் பேரிலேயே இந்த இரண்டு கப்பல்களிலும் நிவாரணப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் எதிர்கால வெளிநாட்டு ராஜதந்திர உத்தியாக இச்செயற்பாடு இடம்பெற்றுவருவதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக பல செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வரும் வேளையில், இச்செயற்பாடும் அவற்றில் ஒன்றாக இருக்குமா என்பது தற்போது கேள்வியாகியுள்ளது.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி தனது ராஜதந்திர உறவுகளில் அதிகமாக சீனாவுடனே தனது உறவுகள பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆட்சியினை இழந்தாலும் சீனாவுடனான நட்புறவு தொடர்ந்து வருகின்றமை நாம் அறிந்ததே.
குறிப்பாக இந்திய-சீனப் போருக்கும் முக்கியக் காரணமாகக் கூறப்படுவது எல்லைப் பிரச்சனை. இந்திய-சீன எல்லை என்பது சுமார் 3448 கி.மீ. நீளம் கொண்டது. பொதுவாக, இந்த எல்லைப் பிரச்சனை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கூறப்படுகிறது. அவை…
(அ) மேற்குப் பகுதி: இது ஜம்மு-காஷ்மீருக்கும் ஸிங்ஜியாங்–இற்கும் இடைப்பட்ட பகுதி. சீனா இந்தியாவின் 43000 ச.கி.மீ பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கூறுகிறது. இதில் 5180 ச.கி.மீ. பாகீஸ்தானால் சீனாவிற்குக் கொடுக்கப்பட்டது
(ஆ) மத்தியப் பகுதி: இது ஹிமாசலம், உத்ராகாண்ட் ஆகிய மாநிலங்களும் திபெத்தும் இணையும் எல்லைப் பகுதி. இங்கு ஷிப்கி-லா, கௌரிக், புலம், தக்-லா, பராஹொரி, பிங்ரி-லா, லப்தால், சங்கா ஆகியப் பகுதிகளை இந்தியா-சீனா இரண்டும் சொந்தம் கொண்டாடின.
(இ) கிழக்குப் பகுதி: சீனா இந்தியாவின் அருணாசலப்பிரதேசத்தின் 90000 ச.கி.மீ. பகுதியை (முக்கியமாக தவாங், பும்-லா, அஸப், லோ-லா ஆகியவை; இதில் தவாங் பகுதி, சியாசின் போல இராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது) தனதாகச் சொந்தம் கொண்டாடியது.
இவ்வாறு எல்லைப்பிரச்சினையில் பாகிஸ்தானை விட சீனாவின் மீதே அதிகரித்த மோதலை வளர்த்துக்கொண்டு வருகின்றது இந்தியா.
தீராத பிரச்சினையாக வலுவெடுத்துள்ள இப்பிரச்சினைக்கு தற்போது இலங்கையை தளமாக இந்தியா பயன்படுத்தும் விடயம் உண்மையென்றால் எதிர்காலத்தில் பாரிய பின் விளைவுகளை இலங்கை எதிர்நோக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
குறிப்பாக சீனா இலங்கையில் ஏற்கனவே மகிந்தவின் ஆட்சியில் பல முதலீடுகளையும், ஒப்பந்தங்களையும் மேற்க்கொண்டுள்ளது. தொடர்ந்து வந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் சீனாவுடனான உறவு தவிர்க்க முடியாமல் போனமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அமைவிடத்தை தீர்மானித்துள்ள மேற்குலக நாடுகள் இலங்கையை ஒரு போருக்கான பொருத்தமான தளமாக அடையாளமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் அமெரிக்காவும் அடங்கும்.
இந்நிலையில் நிவாரணம் என்ற போர்வையில் இரண்டு கப்பல்களும் ஆயுதங்களை கொண்டுவந்துள்ளமை உண்மையானால் இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறியே.
காரணம் தற்போது ஆயுதங்கள் ரீதியிலும், பொருளாதாரம் ரீதியிலும் முன்னிலையில் உள்ள சீனாவிற்கு இலங்கையின் செயற்பாடு பாரிய அதிர்ப்பதியினை ஏற்படுத்தும்.
குறிப்பாக அமெரிக்காவே வியந்துப்போயுள்ள சீனாவின் வளர்ச்சியில் இலங்கை ஒரு விடயமே இல்லை.
ராஜதந்திர உறவுகளை பொருத்தமான முறையில் மேற்கொள்ளுவது கட்டாயமானதாகும்.
சுனாமியில் பல உயிர்களை இழந்தது இலங்கை.
வெள்ளப்பபெருக்கு , மண்சரிவு என பல உயிர்களை இழந்தது இலங்கை
யுத்தம் என்ற போர்வையில் பல உயிர்களை இழந்தது இலங்கை.
தற்போது ஆயுத கடத்தல் என்ற விடயம் மட்டும் உண்மை எனின் எதிர்காலத்தில் இலங்கையின் அமைவிடமே இல்லாமல் போகும் நிலை வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இவற்றில் முதலில் பாதிக்கப்படுவது வடக்கு பிரதேசமாகவே இருக்கும், ஈழத்தமிழர்களின் அழிவிலும் முன்னின்று செயற்பட்ட இந்தியாவிற்கு இலங்கை செய்யும் கைமாறாக இவ் ஆயுதம் இறக்கப்பட்ட விடயம் என சிலர் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆயுத பலத்தில் ராஜாவாக திகலும் சீனாவிற்கு இலங்கையை சுக்கு நூறாக்க ஒரு நிமிடம் போதும் இதுவே உண்மை……….இதற்கான ஆரம்பத்தை இலங்கையே ஏற்படுத்திக்கொடுக்கிறதா? இலங்கைக்கான அழிவுக்குழியை இலங்கையே வெட்டுகிறதா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது……..

Share:

15 May 2016

இலங்கையில் சீரற்ற காலநிலை: அவசர அறிவித்தல்….!

யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடும் மழை பொழியும்!! சூறாவளி அபாயம்
யாழ்ப்பாணம் உட்பட்ட வடபகுதி மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடும் காற்றுடன் கூடிய கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அருகில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் தற்போது நாட்டிற்குள் நுழைந்துள்ளது எனவும் இது சில வேளை புயலாக மாறி கடும் காற்றுடன் கூடிய கனமழையை உருவாக்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதே வேளை
நுவரெலியா, கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட பலபொக்குன பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்று காரணமாக மரம் ஒன்று வீடுகளின் மேல் சரிந்து வீழ்ந்ததால் இரு வீடுகளும் ஒரு லொறியும் சேதமடைந்துள்ளது.
இதனால் குறித்தப் பகுதியில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு திருத்த பணிகளை கொத்மலை மின்சார சபை மேற்கொண்டு வருகின்றது.
அனர்த்தம் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை கொத்மலை பிரதேச சபை அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் பொலிஸார், கிராம சேவகர் மற்றும் பொது மக்கள் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும் சீரற்ற காலநிலையால் கொழும்பில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாணந்துறை பகுதியில் மினி சூறாவளி ஒன்று ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த மினி சூறாவளியால் சுமார் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதில் யாருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சீரற்ற காலநிலை: அவசர அறிவித்தல்….!
நாட்டில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும், அவசர அனர்த்த நிலைமைகளை உடனடியாக அறியத்தருமாறும் அவசர அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு மக்களிடம் கோரியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் மேலதிக பணிப்பாளர், பிரிகேடியர் கே.ஜெ.ஜெயவீரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அனர்த்தம் தொடர்பில் கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம்.
இராணுவம் – 011 2 434 251 / 011 3 818 578
கடற்படை – 011 2 445 368 / 011 2 212 230 / 011 2 212 231
விமானப்படை – 011 2 343 970 / 011 2 343 971
Share:

14 May 2016

ஈழத்தமிழன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான்

•இவர்கள் பிழைக்க தெரியாதவர்கள் இல்லை!

செய்தி- லண்டன் வந்த ஜனாதிபதி மைத்திரிக்கு கொட்டும் மழையிலும் தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவர்கள் விரும்பியிருந்தால்,

•வேலைக்கு போய் ஆகக் குறைந்தது 50 பவுண்ஸ்( 10 ஆயிரம் ரூபா) உழைத்திருக்க முடியும்

•அல்லது தியேட்டருக்குப் போய் சூரியா படம் பார்த்திருக்க முடியும்

•அல்லது பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு சொப்பிங் போயிருக்க முடியும்

•அல்லது குடும்பத்துடன் கோயிலுக்கு போயிருக்க முடியும்

•அல்லது வீட்டில் இருந்துகொண்டு டிவி யில் சுப்பர் சிங்கர் பார்த்திருக்க முடியும்
.
•அல்லது தண்ணியடித்து பாபர்கியூ போட்டு சாப்பிட்டிருக்க முடியும்

இதையெல்லாம் செய்யாமல் கொட்டும் மழையில் ஜனாதிபதி மைத்திரிக்கு எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்?

இவர்கள் மற்றவர்கள் போல் பிழைக்க தெரியாதவர்களா?

இல்லை. நிச்சயமாக இல்லை.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நம்பிக்கையுடன் போராடுகிறார்கள்.

பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்தாலும் தமிழ் இனம் அடிமையாக உறங்கிக் கிடக்காது என்பதை காட்டுகிறார்கள்.

ஒரு சிலருக்கு எதிர்க்ட்சி தலைவர், மாகாண முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை கொடுத்தாலும் மொத்த தமிழ் இனத்தையும் வாங்க முடியாது என்பதை காட்டுகிறார்கள்.



புலத்தில் இருந்தாலும் தமது உறவுகளுக்காக போராட தயங்கமாட்டோம் என்பதைக் காட்டுகிறார்கள்.

நியாயம் கிடைக்கும் வரை தமிழன் ஓயமாட்டான் என்பதை முழு உலகிற்கும் காட்டுகிறார்கள்.

இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் இவர்கள் சொல்லியிருக்கும் செய்தி நிச்சயம் கனதியானது.


போராட்டம் இன்றேல் வாழ்க்கை இல்லை- தோழர் லெனின்.


தாயகத்தின் இறுதிவீரன் இருக்கும்வரை விழமாட்டார் வீரப்புலிகள்

தமிழீழ தேசிய தலைவரின் சிந்தனைகளில் இருந்து…

எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றானர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.

எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு. எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீ சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

Share: