15 May 2016

மஹிந்தவின் அரசியல் கிசுகிசு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உபாலி கொடிகார அண்மையில் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார்.
மஹிந்தவின் உகண்டா பயணத்தில் இணைந்து கொள்ள எடுத்த முயற்சியே இதற்கான காரணம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச இந்த உகண்டா விஜயத்தில் இணைத்துக்கொள்ளப்படவிருந்தார், எனினும் கடவுச்சீட்டை நீதிமன்றம் வழங்கவில்லை.
இதனால் யோசிதவிற்கு பதிலாக தம்மை உகண்டா அழைத்துச் செல்லுமாறு மஹிந்தவிடம், முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உபாலி கொடிகார கோரியுள்ளார்.
“சேர் யோசித வரவில்லை என்பதனால் என்னை உங்களுடன் அழைத்துச்செல்லுங்கள்” என உபாலி கொடிகார கோரியுள்ளார்.“நீர் எம்முடன் தாய்லாந்து வந்தீர், தற்போது இங்கும் வரவா பார்க்கின்றீர்?” என மஹிந்த கேள்வி எழுப்பியுள்ளார்.
“அப்படியாயின் டிக்கட் எடுத்துக் கொண்டு உகண்டா வருகின்றேன்” என உபாலி கொடிகார தெரிவித்துள்ளார்.“ விசர் கதை கதைக்காதே ஐசே, இந்தப் பயணத்தில் நீர் இணைந்துகொள்ளப் போவதில்லை தீர்மானித்துவிட்டேன்” என மஹிந்த பதிலளித்துள்ளார்.
“சரி அப்படியென்றால் என்ன செய்வது” என கொடிகார கூறியுள்ளார்.மஹிந்த ராஜபக்ச உகண்டா விஜயம் செய்வதற்கு முன்னதாக இந்த சம்பாசனை இடம்பெற்றுள்ளதாக சிங்கள வார இறுதி பத்திரிகையொன்று அரசியல் கிசுகிசு பகுதியில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மஹிந்த போன்று ஆடையணிந்து மஹிந்தவின் டம்மியாக வாகனத்தில் அங்குமிங்கும் உபாலி கொடிகார பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவின் தீவிர விசுவாசியான உபாலி கொடிகார, புதிய தலைமையை கடுமையாக பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share: