Showing posts with label Tamil Cinema. Show all posts
Showing posts with label Tamil Cinema. Show all posts

22 May 2016

யாழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு!

யாழ்ப்பாண மக்கள் நிலத்தடிநீர், தரை மேல் நீர் தொடர்பில் நீண்டகாலமாக பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில் அப்பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐங்கரநேசன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்குதல் மற்றும் வடிகால் சீரமைப்பு, குளங்களை தூர்வாருதல், புனரமைத்தல் போன்ற முக்கியமான விடயங்கள் பற்றி ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மக்கள் நிலத்தடிநீர், தரை மேல் நீர் தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் யாழ்ப்பாண நிபுணர்களினால் ஆராயப்பட்டு அமைச்சருக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வு இன்னும் இரு வாரங்களில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெற்கில் முக்கியத்துவம் கொடுத்து அபிவிருத்திகள் இடம்பெறுவது போல வடக்கிற்கும் அதிகளவில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டாயப் பணிப்பினை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டதக்கது. இந்த பணிப்பை அங்கஜன் இராமநாதனுக்கும் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Share:

கொழும்பில் வெள்ளம், காரணம் என்ன? விளக்குகின்றார் அதிகாரி

மழைக்காலங்களில் ஆறுகள் விரிவாக ஓடுவதற்கான நிலங்கள் குறைவடைதல், சட்டவிரோத கட்டடங்களை அமைத்தல், குப்பைகளை கொட்டுவதற்கு முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை மற்றும் செயற்றின் அற்ற வடிகான் அமைப்பு முறையே கொழும்பு புறநகர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் புறநகர் பிரதேசங்களான களனி, உருகொடவத்தை, வெல்லம்பிட்டிய உள்ளிட்ட களனி ஆற்றை அண்மித்த பல பிரதேசங்கள் கடந்தவாரம் பெய்த கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியது.
சுமார் 27 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் வெள்ளம் இதுவரை முழுமையாக வடிந்தோடாத நிலையில் அரசாங்கமும், பொது அமைப்புகள் மற்றும் பொது மக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தாழ்நிலப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் டி.பி.அல்விஸ் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
நகரை அண்மித்த வடிகான்களில் ஏற்பட்ட அடைப்பு வெள்ள நீர் ஆறு மற்றும் கடலை சென்றடைவதில் தடையை ஏற்படுத்தியதாகவும் அவர் குறி்ப்பிட்டுள்ளார்.
கால்வாய்கள் ஆறு மற்றும் கடல் மட்டத்தை விடவும் குறைந்த உயரத்தில் காணப்படுவதால் நீர் வெளியேற்றத்தில் தாக்கம் செலுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சதுப்பு நிலங்கள் அபிவிருத்திப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றமை வெள்ளப்பெருக்கு எறபடுவதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சதுப்பு நிலங்கள் மற்றும் ஆற்றை அண்மித்த நிலங்களில் அமைக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் வேறு கட்டடங்களே, களனி பிரதேசத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கிற்கு காரணமென டி.பி.அல்விஸ் தெரிவித்துள்ளார்.
27 வருடங்களுக்கு பின்னர் முதன் முறையாக களனி ஆற்றின் நீர்மட்டம் அசாதாரணமாக 7.3 அடிக்கு உயர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 1989ஆம் ஆண்டு ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் களனி ஆற்றின் நீர் மட்டம் 7.8 அடியாக உயர்ந்ததோடு, இதனால் கொழும்பில் 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share:

15 May 2016

நாம் தமிழர் கட்சிக்கு நடிகர் இளைய தளபதி விஜய் ஆதரவு

நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கே தமது ஆதரவு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவர் இதனை தனது பிரத்தியேக செயலாளர் ஊடாக அனைத்து இந்திய ரசிகர் மன்ற அமைப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பின் காரணமாக ரசிகர்களும் தமிழ் உணர்வாளர்களும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.இதேவேளை நாம் தமிழர் கட்சிக்கும் சீமானுக்கும் தமது ஆதரவை தெரிவிப்பதாக தமிழ் பற்று கொண்ட சகாயம் ஐ.ஏ.எஸ், நடிகர் கமலகாசன், சத்தியராஜ், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி, சிவக்குமார், இயக்குநர் பாரதிராஜா, தங்கர்பச்சான், ஆர்.கே. செல்வமணி, பாலா, சசிகுமார், சமுத்திரக்கனி, சேரன், பார்த்திபன், அமீர் மேலும் சிலர் மறைமுகமாக கூறியுள்ளமை வரவேற்கத்தக்கது என இந்திய தமிழ் எழுத்தாளர் ஒருவர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் வாக்களிக்கும்படி புலம்பெயர் விஜய் ரசிகர் மன்ற தலைவர் அண்டோனி தெரிவித்திருந்தார். அத்துடன் நடைபெறவுள்ள தமிழக சட்டபை தேர்தலில் சீமானுக்கு தமது வாக்குகளை வழங்கி அவரை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Share:

14 May 2016

சூர்யா – ஜோதிகாவின் திடீர் முடிவு

ஊருக்கு தான் உபதேசம் தனக்கு இல்லை என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அது போல தான் உள்ளது நடிகர் சூர்யாவின் செயல். தொலைக்காட்சிகளில் தோன்றி அனைவரும் ஓட்டு போடுங்கள் என வலியுறுத்திய நடிகர் சூர்யா வாக்களிக்க மாட்டார் என பேசப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மக்கள் தங்களது ஓட்டுரிமையை நிறைவேற்ற வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வு எற்படுத்தி வந்த நடிகர் சூர்யா, தேர்தல் நாளன்று அவர் சென்னையில் இருக்க மாட்டார் என்ற தகவல் வந்துள்ளது.
சூர்யா தனது மனைவி ஜோதிகா உடன் விடுமுறைக்காக அமெரிக்கா சென்று இருப்பதாகவும் இந்த மாத இறுதியில் தான் சென்னை திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் தேர்தல் நாளன்று அனைவரும் வாக்களிக்கும் விதமாக அன்றைய தினம் விடுமுறை அறிவித்துள்ளது. இது அனைத்து சினிமா தொழிலாளர்கள் மற்றும் பிரபல நட்சத்திரங்கள் வாக்களிக்க உதவும்.
விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, திரிஷா போன்ற பிரபல நடிகர்கள் மே 16-ம் தேதி வாக்களிப்பதை உறுதி செய்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களிப்பார்.
Share:

10 May 2016

நமீதா திருப்பதியில்

நடிகை நமீதா தன்னுடைய பிறந்த நாளையொட்டி திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.
‘எங்கள் அண்ணா’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நமீதா. இப்படத்தை தொடர்ந்து ‘ஏய்’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘சாணக்கியா’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், உடல் எடை கூடியதால் சிறிது காலம் நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘பொட்டு’ என்னும் திகில் படத்தில் நமீதா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் சமீபத்தில் ஜெயலலிதா மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
இன்று தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதியில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். நேற்றே திருப்பதிக்கு சென்ற இவர் இன்று காலை பெருமாளை தரிசனம் செய்து விட்டு வந்திருக்கிறார்.
இது ஒருபக்கம் இருக்க, மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
Share:

மாற்றிக் கொண்ட நிக்கி!

தமிழ் திரையுலகில் சில நாட்களில் பலராலும் கவனிக்கப்பட்டவர் நிக்கி.
சில படங்களில் நடித்து விட்டார்.
என்னதான் அழகு இருந்தாலும், திறமையும் உழைப்பும் இருந்தால்தான் நிலைத்து நிற்க முடியும் என்று, தத்துவம் உதிர்க்கிறார் நிக்கி கல்ராணி.
பாபி சிம்ஹாவுடன் நிக்கி ஜோடி போட்டிருக்கும் கோ-2 விரைவில் வெளியாகவிருக்கிறது.
இதில் பத்திரிகையாளராக நடித்திருக்கிறார் நிக்கி. மேலும் அவருக்கு முக்கியத்துவமும் இருக்குதாம்.
இதற்காக பத்திரிகையாளர்களைப் பார்த்து தனது நடை, உடை பாவனையை மாற்றிக்கொண்டாராம்.
Share: