Showing posts with label யாழ். Show all posts
Showing posts with label யாழ். Show all posts

25 May 2016

வாள் வெட்டுக் குழு தலைவா .. நீ பல்லாண்டு வாழவேண்டும் என வாழ்த்திய யாழ் மாணர்கள் இவர்கள்

யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள் என பொலிசாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை , "தலைவா நீ 100 வருடம் வாழவேண்டும் என்று வாழ்த்திய இரு மாணவர்களை ஜூன் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு இட்டுள்ளார். யாழில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் நேற்று  முன் தினம் இரு சந்தேக நபர்கள் கந்தரோடை பகுதியில் வைத்து சுன்னாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் நீண்ட கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டு இருந்தது. இவர்கள் இருவரும் யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் என்பது அதிர்ச்சி தகவல்.
அதன் போது குறித்த சந்தேக நபர்கள் , யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள் எனத் தேடப்பட்டு வரும் இரு சந்தேக நபர்களான "சன்னா"  மற்றும் "தேவா" எனப்படுபவர்களுடன் தொடர்புகளை பேணி வந்ததாகவும் , அவர்களுக்கு கைத்தொலைபேசியில் "எங்கள் அண்ணா நீங்கள் பல்லாண்டு  வாழ வேண்டும். நாடு  நல்லா  இருக்க  பல்லாண்டு  வாழ வேண்டும். எங்கள் உயிரினும் மேலான எங்கள் அண்ணா என குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பியுள்ளதாக நீதவானின் கவனத்திற்கு இந்த குறுந்தகவல்களை பொலிசார் கொண்டு வந்தனர்.
அத்துடன் அவர்களது தொலைபேசியில் இருந்து அவர்கள் வாள் மற்றும் கத்தியுடன் விதம் விதமாக (போஸ்) எடுத்த படங்களையும் பொலிசார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.அதனை அடுத்து இருவரையும் எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார். இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் இரு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
Share:

22 May 2016

யாழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு!

யாழ்ப்பாண மக்கள் நிலத்தடிநீர், தரை மேல் நீர் தொடர்பில் நீண்டகாலமாக பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில் அப்பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐங்கரநேசன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்குதல் மற்றும் வடிகால் சீரமைப்பு, குளங்களை தூர்வாருதல், புனரமைத்தல் போன்ற முக்கியமான விடயங்கள் பற்றி ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மக்கள் நிலத்தடிநீர், தரை மேல் நீர் தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் யாழ்ப்பாண நிபுணர்களினால் ஆராயப்பட்டு அமைச்சருக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வு இன்னும் இரு வாரங்களில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெற்கில் முக்கியத்துவம் கொடுத்து அபிவிருத்திகள் இடம்பெறுவது போல வடக்கிற்கும் அதிகளவில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டாயப் பணிப்பினை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டதக்கது. இந்த பணிப்பை அங்கஜன் இராமநாதனுக்கும் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Share:

பெரு வெள்ளம்: பால்மா இன்றி தவிக்கும் கொழும்பு

களனி கங்கையின் பெருக்கெடுப்பால், கொழும்பின் தொட்டலங்க, சேதவத்தை, மட்டக்குளியின் சில பகுதிகள் தொடர்ந்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்தும் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள், உடை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா, சிறுவர் உணவுகளுக்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசங்களை, களனி ஆற்றிலிருந்து பெருக்கெடுக்கும் வெள்ள நீர் நேற்று சுமார் மூன்றரை அடிக்கு மேல் மூழ்கடித்திருந்த நிலையில் அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பாடசாலைகள் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக சமைத்த உணவும், சிலருக்கு சமைப்பதற்கான அரிசி உள்ளிட்ட பொருட்களும் தடையின்றி பலராலும் வழங்கப்பட்டு வருகிறன.
எனினும் அந்த மக்களின் உடைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் மாற்று உடைக்காக மக்கள் காத்திருப்பதுடன், நூர்றுக்கணக்கான கைக் குழந்தைகளுக்கு தேவையான பால் மாவினை பெற்றுக்கொள்வதிலும் பாதிக்கப்பட்டோர் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
தொட்டலங்க பகுதியில் வெள்ள்த்தால் வீடுகளை இழந்துள்ள மக்கள், இலங்கை – ஜப்பான் நட்புறவு பாலத்தின் அருகே முகாமிட்டு தங்கியுள்ளனர். பலர் தமது வீடுகளின் மேல் மாடிகளிலும், சிலர் உறவினர், அயலவர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
குறிப்பாக வெள்ள நீரில் மூழ்கியுள்ள வீடுகள் பலவற்றில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடும் மக்கள் அதனால் வீடுகளை விட்டு வெளியேறுவது குறித்து பலமுறை சிந்திப்பதாக கூறுகின்றனர். இதனால் பலர் வெள்ள நீருக்கு மத்தியிலும் தமது குடியிருப்புக்களிலேயே முடங்கிக்கிடக்கின்றனர்.
எவ்வாறாயினும் பல பகுதிகளிலிருந்து உணவினைக் கொண்டு வரும் நிவாரண பணியாளர்கள் அவற்றை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டோருக்கு வழங்கி வருகின்றனர்.
எனினும் நிவாரணப் பணியாளர்கள் மற்றும் தனவந்தர்களிடம் குழந்தைகளுக்கான பால்மா, மாற்று உடை, மருந்து மற்றும் பம்பஸ் உள்ளிட்டவற்றை பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
அத்துடன் பிரதேசத்தின் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து கல்வி உபகரணங்களும் வெள்ளத்தால் அழிவடைந்துள்ள நிலையில் அவற்றுக்கும் உதவி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Share:

16 May 2016

யாழில் சீரற்ற காலநிலை – 1168 குடும்பங்களைச் சேர்ந்த 5047 பேர் பாதிப்பு

யாழில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 1168 குடும்பங்களைச் சேர்ந்த 5047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இதன்போது யாழ்ப்பாண நகரப்பகுதி, நல்லூர், சண்டிலிப்பாய், வேலனை, உடுவில், தெல்லிப்பளை, பருத்தித்துறை உள்ளிட்ட பல பகுதிகளையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த பகுதிகளிலுள்ள தற்காலிக வீடுகள் பகுதியளவில் சேதடைந்திருக்கின்றன. மேலும், இரண்டு வீடுகள் முழு அளவில் சேதமடைந்துள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதிகளவான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Share:

15 May 2016

இலங்கையில் சீரற்ற காலநிலை: அவசர அறிவித்தல்….!

யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடும் மழை பொழியும்!! சூறாவளி அபாயம்
யாழ்ப்பாணம் உட்பட்ட வடபகுதி மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடும் காற்றுடன் கூடிய கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அருகில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் தற்போது நாட்டிற்குள் நுழைந்துள்ளது எனவும் இது சில வேளை புயலாக மாறி கடும் காற்றுடன் கூடிய கனமழையை உருவாக்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதே வேளை
நுவரெலியா, கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட பலபொக்குன பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்று காரணமாக மரம் ஒன்று வீடுகளின் மேல் சரிந்து வீழ்ந்ததால் இரு வீடுகளும் ஒரு லொறியும் சேதமடைந்துள்ளது.
இதனால் குறித்தப் பகுதியில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு திருத்த பணிகளை கொத்மலை மின்சார சபை மேற்கொண்டு வருகின்றது.
அனர்த்தம் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை கொத்மலை பிரதேச சபை அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் பொலிஸார், கிராம சேவகர் மற்றும் பொது மக்கள் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும் சீரற்ற காலநிலையால் கொழும்பில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாணந்துறை பகுதியில் மினி சூறாவளி ஒன்று ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த மினி சூறாவளியால் சுமார் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதில் யாருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சீரற்ற காலநிலை: அவசர அறிவித்தல்….!
நாட்டில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும், அவசர அனர்த்த நிலைமைகளை உடனடியாக அறியத்தருமாறும் அவசர அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு மக்களிடம் கோரியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் மேலதிக பணிப்பாளர், பிரிகேடியர் கே.ஜெ.ஜெயவீரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அனர்த்தம் தொடர்பில் கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம்.
இராணுவம் – 011 2 434 251 / 011 3 818 578
கடற்படை – 011 2 445 368 / 011 2 212 230 / 011 2 212 231
விமானப்படை – 011 2 343 970 / 011 2 343 971
Share:

10 May 2016

சுவிஸ்குமார் தப்பித்தது எப்படி? சிக்கப்போகின்ற முக்கியஸ்தர்கள்!

வித்தியா படுகொலை தொடர்பில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் எவ்வாறு கொழும்பு சென்றார் என்பது தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்க பணிக்கப்பட்டுள்ள நிலையில் வி.ரி.தமிழ்மாறன் உள்ளிட்டவர்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளனர்.
நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றில் வித்யா வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சுவிஸ்குமார் யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்யப்பட்டாரா? அல்லது சரணடைந்தாரா? கைது செய்யப்பட்டிருந்தால் எந்த அதிகாரி அவரை கைது செய்தாரோ அவருடைய பெயர் விலாசம் சரணடைந்திருந்தால் எந்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் அது தொடர்பில் பதியப்பட்ட பதிவுகள், அவர் நீதிபதி முன்னிலையில் முற்படுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பான அறிக்கை என்பவற்றை நீதிமன்று கோரியுள்ளது.
குறிப்பாக சுவிஸ்குமார் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டோ அல்லது சரணடைந்த சுவிஸ்குமார் எவ்வாறு கொழும்பு சென்றார், யார் அவரை கொழும்புவரை அழைத்துச்சென்றார்கள் அவர்களின் பெயர் விலாசம் மற்றும் கொழும்பில் அவர் எந்த பொலிசாரால் கைது செய்யப்பட்டாரோ அது தொடர்பான விரிவான அறிக்கையும் கோரப்பட்டுள்ளது.
குற்றச்செயல் இடம்பெற்ற காலப்பகுதியில் சுவிஸ்குமாரின் தொலை பேசி உரையாடல்களின் ஒலித்தொகுப்பு உள்ளிட்ட சகல விடயங்கள் தொடர்பிலும் ஒவ்வொன்றாக விரிவாக ஆராய்ந்து தெளிவாக தனித்தனியான அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸ்குமார் தப்பிக்க உதவியதாக முன்னணி சட்டவிரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share:

நீதிபதி இளஞ்செழியன் முடிவால் கதி கலங்கும் வாள் வெட்டுக் குழுக்கள்

யாழ் குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும்குழுக்களை கைது செய்வதற்கு அதிடிப்படையைக் களத்தில் இறக்குமாறு யாழ்ப்பாணம்பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை பிறப்பித்துள்ளார்.
யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்களைக்கட்டுப்படுத்துவதற்கு பிரதேச பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையைக்களத்தில் இறக்கி குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கைது செய்யுமாறுநீதிபதி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாகப் பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் கடந்த வாரம் ஆஜராகிய யாழ் பிரதிபொலிஸ் மா அதிபர் யாழ் குடாநாட்டில் குற்றச் செயலகளைக்கட்டுப்படுத்துவதற்குப் பொலிசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்துவிபரித்திருந்தார்.
பொலிசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த நீதிபதி இளஞ்செழியன்,குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களாகிய அராலி, வட்டுக்கோட்டை,சுன்னாகம், கோப்பாய், மானிப்பாய் போன்ற இடங்களில் விசேட அதிரடிப்படையைக்களத்தில் இறக்கி, குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கைது செய்வதற்குவிசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்தந்தப் பிரதேச பொலிசாருக்குஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தினார்.
குற்றச்செயல்கள் நிலைமைகள் குறித்து நீதிபதியிடம் விபரித்த யாழ்ப்பாணம் பிரதிபொலிஸ் மா அதிபர் ஏற்கனவே அதிரடிப்படை களத்தில் இறக்கப்பட்டு,சந்தேகத்திற்குரியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன் மாலை 6 மணியில் இருந்துவிசேட அதிரடிப்படையின் மோட்டார் சைக்கிள் அணியின் ரோந்து நடவடிக்கைகள்ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இருப்பினும் குற்றச்செயல்கள் யாழ் குடாநாட்டில் அதிகரித்த வண்ணம் இருப்பதைச்சுட்டிக்காட்டிய நீதிபதி, வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக்கட்டுப்படுத்துவதற்காகக் கூடுதலாக விசேட அதிரடிப்படையை கடமையில்ஈடுபடுத்துமாறு பணிப்புதை விடுத்தார்.
இதனையடுத்து, உடனடியாகவே, விசேட அதிரடிப்படையின் பொலிஸ் அத்தியட்சகருடன்தொடர்பு கொண்ட யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர், குற்றச்செயல்கள் அதிகமாகஇடம்பெறுகின்ற முக்கியமான இடங்களைச் சுட்டிக்காட்டி, ரோந்து நடவடிக்கைகளைஅதிகரித்து, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறுபணிப்புரை விடுத்தார்.
Share: