22 May 2016

பிரித்தானியாவில் பெண்ணொருவர் மர்மமான முறையில் கொலை

பிரித்தானியாவின் Surrey பிரதேசத்தில் அமைந்துள்ள வேபிரிஸ் பகுதியில் சந்தைப்பகுதியின் பின்புறமாக இருந்து 38 வயமான பெண்ணின் சடலம் நேற்று (சனிக்கிழமை) Surrey பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.

 இதேவேளை, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு அருகாமையில் Surrey நிலையத்தில் வைத்து பலமான காயங்களுடன் ஒரு ஆண் கண்டுபிடிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த ஆண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்ட சடலம் யார் என்று அதிகாரபூர்வமாக இனங்காணப்படாத போதிலும், பெண்ணின் உறவினர்கள் கூறிய அடையாளங்களுடன் இணங்கி காணப்படுவதனால் பொலிஸார் அதனைஉறுதி செய்துள்ளனர்.

 பொலிஸ் தலைமைக் கண்காணிப்பாளர் இது தொடர்பில் தெரிவிக்கையில், இது ஒரு சோகமான நிகழ்வு தான். எங்களால் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு என்ன செய்ய முடியுமோ அவை அத்தனையும் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எவ்வாறான போதும், காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஆணுக்கும் குறித்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் இருக்குமா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Share: