14 May 2016

ஈழத்தமிழன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான்

•இவர்கள் பிழைக்க தெரியாதவர்கள் இல்லை!

செய்தி- லண்டன் வந்த ஜனாதிபதி மைத்திரிக்கு கொட்டும் மழையிலும் தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவர்கள் விரும்பியிருந்தால்,

•வேலைக்கு போய் ஆகக் குறைந்தது 50 பவுண்ஸ்( 10 ஆயிரம் ரூபா) உழைத்திருக்க முடியும்

•அல்லது தியேட்டருக்குப் போய் சூரியா படம் பார்த்திருக்க முடியும்

•அல்லது பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு சொப்பிங் போயிருக்க முடியும்

•அல்லது குடும்பத்துடன் கோயிலுக்கு போயிருக்க முடியும்

•அல்லது வீட்டில் இருந்துகொண்டு டிவி யில் சுப்பர் சிங்கர் பார்த்திருக்க முடியும்
.
•அல்லது தண்ணியடித்து பாபர்கியூ போட்டு சாப்பிட்டிருக்க முடியும்

இதையெல்லாம் செய்யாமல் கொட்டும் மழையில் ஜனாதிபதி மைத்திரிக்கு எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்?

இவர்கள் மற்றவர்கள் போல் பிழைக்க தெரியாதவர்களா?

இல்லை. நிச்சயமாக இல்லை.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நம்பிக்கையுடன் போராடுகிறார்கள்.

பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்தாலும் தமிழ் இனம் அடிமையாக உறங்கிக் கிடக்காது என்பதை காட்டுகிறார்கள்.

ஒரு சிலருக்கு எதிர்க்ட்சி தலைவர், மாகாண முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை கொடுத்தாலும் மொத்த தமிழ் இனத்தையும் வாங்க முடியாது என்பதை காட்டுகிறார்கள்.



புலத்தில் இருந்தாலும் தமது உறவுகளுக்காக போராட தயங்கமாட்டோம் என்பதைக் காட்டுகிறார்கள்.

நியாயம் கிடைக்கும் வரை தமிழன் ஓயமாட்டான் என்பதை முழு உலகிற்கும் காட்டுகிறார்கள்.

இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் இவர்கள் சொல்லியிருக்கும் செய்தி நிச்சயம் கனதியானது.


போராட்டம் இன்றேல் வாழ்க்கை இல்லை- தோழர் லெனின்.


தாயகத்தின் இறுதிவீரன் இருக்கும்வரை விழமாட்டார் வீரப்புலிகள்

தமிழீழ தேசிய தலைவரின் சிந்தனைகளில் இருந்து…

எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றானர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.

எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு. எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீ சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

Share: