Showing posts with label வன்னி. Show all posts
Showing posts with label வன்னி. Show all posts

22 Jun 2016

கிளிநொச்சியில் குடும்பமொன்று உண்ணாவிரதம்

பல தசாப்தங்களாக குடியிருக்கும் காணியிலிருந்து தம்மை விரட்ட முற்படுவதாக தெரிவித்து கரைச்சி பிரதேச செயலரிற்கு எதிராக குடும்பமொன்று கிளிநொச்சியில் போராட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த போராட்டம் இன்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன் இடம்பெறுகின்றது. கிளிநொச்சி – ஆனந்தபுரத்தைச் சேர்ந்த முத்தையா விஜயநாதன் என்ற குடும்பத்தவர், மனைவி, சிறு குழந்தைகள் மற்றும் முதிய தாயார் ஆகியோருடன் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 1972 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியில் வசித்துவரும் தம்மை அங்கிருந்து வெளியேற்றி, குறித்த காணியை வேறுநபருக்கு வழங்குவதற்கு பிரதேச செயலாளர் முயற்சிப்பதாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். தமது குடியிருப்பு காணிகளை கையகப்படுத்தும் வகையில் பிரதேச செயலர் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள குடும்பத்தினர், பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதங்களையும் பதாகைகளில் காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share:

வித்தியாவின் தாயை அச்சுறுத்தியோரின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குதீவு மாணவி வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி வரை ஊகாவற்றுறை நீதிமன்றம் நீடித்துள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக அவரது தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின்பேரில் வித்தியா கொலை வழக்குச் சந்தேக நபர்களான சுவிஸ்குமாரின் தாயார் மகாலிங்கம் தவராணி, உசாந்தனின் தாயார் சிவதேவன் செல்வராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதன்போது சந்தேகநபர்களை கடந்த 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் ஜீவராணி உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து 09 ஆம் திகதி சந்தேகநபர்களைமன்றில் முன்னிலைப்படுத்தியபோது இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி ஆர்.சபேசன், சந்தேக நபர்களை பிணையில் விடுமாறு விண்ணப்பம் செய்தார். பிணை மனுவை நீதிவான் எம்.எல்.றியால் நிராகரித்ததோடு, வித்தியா கொலை வழக்கு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கு என்பதால் சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க முடியாது எனவும், மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்யுமாறும் தெரிவித்து சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
Share:

மாட்டுடன் மோதிய நீதிவானின்….

யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை வீதியில் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது. வாகனம் பயணித்துக்கொண்டிருந்த போது வீதிக்கு குறுக்காக மாடுகள் சென்றதாலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த நீதவானை இலுப்பைக்கடவை பொலிஸார் மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நீதவானின் பாதுகாப்பிற்காக சென்ற பொலிஸ் அதிகாரியும் இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரனைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share:

29 May 2016

தொடரும் இராணுவ கெடுபிடி! தவிக்கும் முல்லைத்தீவு மக்கள்!

இலங்கையின் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு , வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மக்கள் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர். இவர்கள் 2014ஆம் ஆண்டு கோப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் மீளக் குடியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் இராணுவத்தினர் தமது பாரம்பரிய காணிகளை கையகப்படுத்தி அவர்களுக்கு தேவையான கட்டடங்களை நிர்மாணித்து வருவதாக தற்போது தகவல்  வெளிவந்துள்ளது. குறிப்பாக பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மாதிரிக் கிராமத்தில் குடியமர்த்தப்பட்டமையால் தமது வாழ்வாதாரமும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே வேளை பல குடும்பங்கள் தமது காணிகளை மீட்ப்பதற்காக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் எனினும் இராணுவத்தினர் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை கைவிடவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Share:

புலிகளின் தலைவர் இன்னும் இறக்கவில்லை – அமைச்சர் விஜயகலா

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று உயிரிழக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள வார பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியதுடன் அவர் தெரிவித்துள்ள இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் விடுதலைப புலிகளின் தலைவருக்கான மரண அத்தாட்சி சான்றிதழை இன்னும் வழங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

மரண அத்தாட்சிப் பத்திரத்தை காட்டினால் மாத்திரமே தன்னால் பிரபாகரன் இறந்து போனார் என்பதை நம்ப முடியும் எனவும் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
Share:

22 May 2016

தென்னிலங்கையில் வெள்ளத்தால் சிங்களம் அழிவு.. தமிழர்கள் உதவி ?

இலங்கையை இயற்க்கை காவு கொண்ட மாதம் மே மாதம், சிங்களம் தமிழனை காவு கொண்ட மாதம் மே மாதம்..
சிரிக்க வேண்டும் சிங்கள மக்களை பார்த்து என்று சொல்லவில்லை.. அப்புறம் எங்களுக்கு அவங்களுக்கும் என்ன வித்தியாசம்.. சிந்தியுங்கள்.. எம்மை சிங்களம் அடித்து கொன்று குவித்த போது சிங்களம் கொண்டாடியது.. " மண்சரிவில் சிக்கிய வீட்டாருக்காக உணவின்றி காத்திருந்த நாய் " என்ற செய்தி Lankasri ஊடகத்தில், வெசாக் கொண்டாடாமல் இருப்பது கவலை அழிக்கிறது.... உலகமே எங்களுக்கு உதவுங்கள்.. தண்ணீரில் மிதக்கும் தென்இலங்கை உதவ யார் ? காணவில்லை எம்முறவுகளை.. இப்படியாக பல செய்திகள்..
இன்று ஒரு நாய்க்காக பரிதாபப்படுவோர் 2009 எமக்காக பரிதாபப்பட்டது யார் ? 2009 இதே மாசம் இதே திகதிகளில் எம்மினம் சாகும் போது நாங்கள் எவ்வோளவு துடித்திருப்போம்.. உறவுகள் எவ்வளவு துடித்திருக்கும்.. ஒரு நாய்க்கு இப்படி பரிதாபம் காட்டுவோர்.. அன்று 2009 இல் எத்தனை நாய், கால்நடைகள், எத்தனை உயிர்கள் கொத்து கொத்தாக உயிரோடு கொலை செய்யும் போது எங்கே அந்த ஊடகங்கள் ?
இன்று நொடிக்கு ஒருமுறை இலங்கையில் வெள்ளம், மண்சரிவு மக்கள் அவலம் என்று ஊடகங்களில் செய்தி.. தமிழ் ஊடகங்கள் தான் முன்னிலையில்.. தமிழ் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டது அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை.. பாதிப்பு குறைவு என்று ஒதுக்கி விட்டார்களோ ? 2009 இல் சிங்கள காடையர்களால் எமது இனம் கொத்து கொத்தாக கொலை செய்யப்படும் பொது யாரும் கேக்கவில்லை.. உலக ஊடகமே வாயை பொத்தி மௌனம் காத்தது.. ஆனால் இப்பொழுது ஒரு நாய் வீட்டாரை காணாது காத்திருந்த செய்தியை போடுகிறார்கள் தமிழ் இணையத்தளத்தினர்.. ( மண்சரிவில் சிக்கிய வீட்டாருக்காக உணவின்றி காத்திருந்த நாய் - Lankasri ஊடகம் ) மே 18 இல் எத்தனை உயிர்களை இழந்தோம் அப்பொழுது யாருக்கும் அந்த வலி தெரியவில்லை..
தமிழர் பகுதிகளும் பாதிக்கபட்டுள்ளது கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகள் ஆனால் அதை கவனிப்பார் யாரும் இல்லை.. தமிழர் பகுதிகளில் பாதிக்கபட்ட மக்களை கவனிக்க வேண்டிய கடமை ஒவொரு தமிழனுக்கும் மற்றும் தமிழ் அரசியல் வாதிகளுக்கும் உண்டு.. நாமும் எங்கள் அறக்கட்டளை மூலம் எங்களால் ஆனா உதவியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு செய்யவிருக்கிறோம்..
இந்தியன் 2 கப்பல் அனுப்புரானாம் நிவாரண பொருட்களோட.. எங்கட தமிழ் இணயதளங்கள் எல்லாம் சேர்ந்து சிங்கள மக்களுக்கு அதை பிரிச்சு கொடுங்க.. கம்மா நாட்டிகளா..
எமினத்தை அழித்த அதே நாளில் மே 18 இல் இயற்க்கை சீற்றம் கொண்டுள்ளது பார்த்தீர்களா ?? புலிகளை அழித்துவிட்டோம் என்று 2009 இல் சிங்கள மக்கள் எலோரும் வீதி வீதியாக கொண்டாடினார்கள்.. இப்பொழுது என்ன ஆகிவிட்டது என்று பார்த்தீர்களா ? 100 சிங்களவன் செத்ததுக்கு இந்த ஆர்ப்பாட்டம் என்றால் அன்று 2009 இலட்ச கணக்கில் எம் தமிழ் மக்கள் கொலபட்ட போது..
இவ்வாறு பேசுதல் தவறு தான் என்னை மன்னித்து கொள்ளுங்கள்.. தேசியத்தலைவர் கூறியது சிங்கள மக்கள் எங்கள் எதிரி இல்லை என்று தான் உண்மை தான்.. ஆனால் எம்மினத்தை கொன்று குவித்த போது சிங்களமே கொண்டாடியது..
இப்பொழுது நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை உதவிகளையும் செய்ய வேண்டும்.. எம்மினம் வெள்ளத்தால் மட்டும் பாதிக்கப்படவில்லை போராலும் பாதிக்கப்பட மக்கள், போராளிகள் பலர் உள்ளனர் அவர்களை நாமே பாதுகாக்க வேண்டும்.. காக்க வேண்டும்..

News From Facebook


Share:

பெரு வெள்ளம்: பால்மா இன்றி தவிக்கும் கொழும்பு

களனி கங்கையின் பெருக்கெடுப்பால், கொழும்பின் தொட்டலங்க, சேதவத்தை, மட்டக்குளியின் சில பகுதிகள் தொடர்ந்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்தும் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள், உடை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா, சிறுவர் உணவுகளுக்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசங்களை, களனி ஆற்றிலிருந்து பெருக்கெடுக்கும் வெள்ள நீர் நேற்று சுமார் மூன்றரை அடிக்கு மேல் மூழ்கடித்திருந்த நிலையில் அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பாடசாலைகள் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக சமைத்த உணவும், சிலருக்கு சமைப்பதற்கான அரிசி உள்ளிட்ட பொருட்களும் தடையின்றி பலராலும் வழங்கப்பட்டு வருகிறன.
எனினும் அந்த மக்களின் உடைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் மாற்று உடைக்காக மக்கள் காத்திருப்பதுடன், நூர்றுக்கணக்கான கைக் குழந்தைகளுக்கு தேவையான பால் மாவினை பெற்றுக்கொள்வதிலும் பாதிக்கப்பட்டோர் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
தொட்டலங்க பகுதியில் வெள்ள்த்தால் வீடுகளை இழந்துள்ள மக்கள், இலங்கை – ஜப்பான் நட்புறவு பாலத்தின் அருகே முகாமிட்டு தங்கியுள்ளனர். பலர் தமது வீடுகளின் மேல் மாடிகளிலும், சிலர் உறவினர், அயலவர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
குறிப்பாக வெள்ள நீரில் மூழ்கியுள்ள வீடுகள் பலவற்றில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடும் மக்கள் அதனால் வீடுகளை விட்டு வெளியேறுவது குறித்து பலமுறை சிந்திப்பதாக கூறுகின்றனர். இதனால் பலர் வெள்ள நீருக்கு மத்தியிலும் தமது குடியிருப்புக்களிலேயே முடங்கிக்கிடக்கின்றனர்.
எவ்வாறாயினும் பல பகுதிகளிலிருந்து உணவினைக் கொண்டு வரும் நிவாரண பணியாளர்கள் அவற்றை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டோருக்கு வழங்கி வருகின்றனர்.
எனினும் நிவாரணப் பணியாளர்கள் மற்றும் தனவந்தர்களிடம் குழந்தைகளுக்கான பால்மா, மாற்று உடை, மருந்து மற்றும் பம்பஸ் உள்ளிட்டவற்றை பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
அத்துடன் பிரதேசத்தின் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து கல்வி உபகரணங்களும் வெள்ளத்தால் அழிவடைந்துள்ள நிலையில் அவற்றுக்கும் உதவி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Share:

15 May 2016

பாணந்துறையில் கடும் காற்று: 30 வீடுகள் சேதம்

பாணந்துறையில் வீசிய கடும் காற்றினால் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், தொடர் மழை காரணமாக பாணதுறை – பழைய காலி வீதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Share:

மஹிந்தவின் அரசியல் கிசுகிசு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உபாலி கொடிகார அண்மையில் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார்.
மஹிந்தவின் உகண்டா பயணத்தில் இணைந்து கொள்ள எடுத்த முயற்சியே இதற்கான காரணம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச இந்த உகண்டா விஜயத்தில் இணைத்துக்கொள்ளப்படவிருந்தார், எனினும் கடவுச்சீட்டை நீதிமன்றம் வழங்கவில்லை.
இதனால் யோசிதவிற்கு பதிலாக தம்மை உகண்டா அழைத்துச் செல்லுமாறு மஹிந்தவிடம், முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உபாலி கொடிகார கோரியுள்ளார்.
“சேர் யோசித வரவில்லை என்பதனால் என்னை உங்களுடன் அழைத்துச்செல்லுங்கள்” என உபாலி கொடிகார கோரியுள்ளார்.“நீர் எம்முடன் தாய்லாந்து வந்தீர், தற்போது இங்கும் வரவா பார்க்கின்றீர்?” என மஹிந்த கேள்வி எழுப்பியுள்ளார்.
“அப்படியாயின் டிக்கட் எடுத்துக் கொண்டு உகண்டா வருகின்றேன்” என உபாலி கொடிகார தெரிவித்துள்ளார்.“ விசர் கதை கதைக்காதே ஐசே, இந்தப் பயணத்தில் நீர் இணைந்துகொள்ளப் போவதில்லை தீர்மானித்துவிட்டேன்” என மஹிந்த பதிலளித்துள்ளார்.
“சரி அப்படியென்றால் என்ன செய்வது” என கொடிகார கூறியுள்ளார்.மஹிந்த ராஜபக்ச உகண்டா விஜயம் செய்வதற்கு முன்னதாக இந்த சம்பாசனை இடம்பெற்றுள்ளதாக சிங்கள வார இறுதி பத்திரிகையொன்று அரசியல் கிசுகிசு பகுதியில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மஹிந்த போன்று ஆடையணிந்து மஹிந்தவின் டம்மியாக வாகனத்தில் அங்குமிங்கும் உபாலி கொடிகார பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவின் தீவிர விசுவாசியான உபாலி கொடிகார, புதிய தலைமையை கடுமையாக பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share:

14 May 2016

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக மஹிந்த அணி போர்க்கொடி!

“நாட்டை சூறையாடிய பயங்கரவாதிகளை மே 18இல் நினைவுகூர வடக்கு மாகாண சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு அரசும் இணக்கப்பாடு தெரிவித்துள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.” – இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மே 18ஆம் திகதி முள்ளிவாய்காலில் வடக்கு மாகாண சபை நினைவேந்தல் நிகழ்வை நடத்தவுள்ளது. இதற்கு அரசும் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையிலேயே தினேஷ் குணவர்தன எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு மஹிந்த ஆட்சியில் நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது மீண்டும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டும் வகையில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

எதிர்வரும் மே 18ஆம் திகதி வடக்கு மாகாண சபை முள்ளிவாய்காலில் நினைவேந்தலை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளமைக்கு அரசு பூரண அனுமதி வழங்கியுள்ளது. வடக்கு மாகாண சபையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் சமஷ்டிக் கோரிக்கைக்கும் அரசின் பூரண ஆதரவு உள்ளது. நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்கும் வடக்கு மாகாண சபை தொடர்பில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” – என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share:

10 May 2016

ஆசிரியர்களுக்கு கிளிநொச்சி அதிபர் கொடுத்த அதிரடி தண்டனை

நல்லது கிளிநொச்சி அதிபர்  மீது பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளது இதற்கு பலர் பல அர்த்தங்களைக் கூற முற்படலாம் அதிபர் தனது கடமையைச் செய்வதில் என்ன தவறு முதலாவது அப்படி அதிபர் செய்த விடயம் ஆசிரியைகளைின் மனங்கள் பாதிக்கும் படி அமைந்திருக்குமாக இருந்தால் குறித்த அதிபர் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நேரத்தை பின்பற்றியமையில் குற்றங் காண்பது சரியா….
ஒரு ஆசியர் நியமனத்தின் போது ஆசிரியர் ஒருவர் நியமனம் பெறும் வரை எங்கு செல்லவும் தயார் எங்கும் பணி செய்வோம் என வரிக்கு வரி கூறுவது யாவரும் அறிந்தது அப்படி இருக்கையில் நேரத்தை உரிய முறையில் பின்பற்றாமை சரியாயின் அதிபர் செய்தமை தவரா அதிபர் யாருக்காக இந்த முடிவை எடுத்தார்.
யாழ்ப்பானத்தில் இருந்து ஒரு ஆசிரியர் ஏனைய மாவட்டங்களுக்கு செல்வது தாமதமாக இருந்தால் பாடசாலை நேரம் காலை 7.30மணிக்கு ஆரம்பமாகும் பாடசாலைக்கு உதாரணமாக ஒரு ஆசிரியர் காலை 8.30க்கு சென்று பாடசாலை முடிவதற்கு முன் துார இடம் என்பதால் பாடசாலை முடிவதற்கு முன் செல்வதை அதிபர் கண்டிப்பது தவறா ஒவ்வெரு பாடசாலையும் மாணவர்களுக்காகவா அல்லது ஆசிரியர்களுக்காகவா குற்றச்சாட்டுகளுக்கு முன் எதிர்காலத்தை ஆராய வேண்டியது அனைவரதும் க டமை அல்லவா…..
இன்று அதிகார வர்க்கம் சாமானிய மனிதர்களை பார்ப்பதை விடுத்து அதிகார வர்க்கத்தைப் பார்க்கும் துர்ப்பாக்கிய நிலை உள்ளமை ஏழை மக்களுக்கு ஆபத்தான விடயமாக கருதப் படுகிறது.
சொந்த ஊரில் எந்த ஆசிரியரின் பிள்ளை படிக்கிறது அல்லது தான் கற்பிக்கும் பாடசாலையில் எத்தனை ஆசிரியரின் பிள்ளை படிக்கிறது அப்படி இருந்திருக்குமாக இருந்திருந்தால் இவ் அதிபரின் நடவடிக்கைக்கு கைதட்டல் கிடைத்திருக்கும் அப்படி இல்லையே….
இவ் அதிபர் போன்று நேரக் கட்டுப்பாட்டை வட-கிழக்கின் அனைத்து அதிபர்களும் பின்பற்றுவார்களாக இருந்தால் தமிழரின் கல்வியின் நிலை 1970களை விட பல் மடங்கு வீச்சாக மாறும்.
இப்படியான அதிபர்கள் நிர்வாகம் முறையாக கடைப்பிடிப்பார்களாக இருந்தால் கல்வி – ஒழுக்கம் பல மடங்கு முன்னகரும் என்பதில் மாற்றமில்லை விமர்சனங்கள் பிரதானம் அதற்காக  முறையற்ற விமர்சனங்கள் தகுமா இவ் அதிபரின் நடவடிக்கையில் குறை காண்பதற்கு முன் தமிழ் சமூகத்தின் நிலையை சிந்திப்பது காலத்தின் கட்டாயம்
வெளிநாடுகளில் நேரக்கட்டுப்பாடு எவ்வளவு அழகாக உள்ளது அது மட்டுமா எவ்வளவு முன்னேற்றம் அதனை எம்மவர்கள் நடைமுறைப்படுத்த முனைவது தவறா
 கடந்த திங்கட்கிழமை இடம் பெற்ற சம்பவம் கீழ் உள்ளது 
கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்றைய தினம் மூன்று ஆசிரியர்கள் சில நிமிடங்கள் தாமதமாக பாடசாலைக்கு வந்தமையினால் பாடசாலையின் பிரதான வாயிற்கதவை பூட்டி வெளியில் விட்டுள்ளார் அதிபர்.
இதனால் பிந்தி வந்த மாணவர்களுடன் ஆசிரியர்களும் பரிதாபமாக பாடசாலைக்கு வெளியில் நின்ற சம்பவம் பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இன்று காலை ஏற்பட்ட இச் சம்பவத்தினால் பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் அதிபருடன் முரண்பட்ட நிலையில் வாயிற் கதவு திறக்கப்பட்டு ஆசிரியர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் வழமையான நடவடிக்கைக்கு அமைவாக நாளாந்த வரவு பதிவேட்டில் காலையில் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திற்கு அதிபரினாலோ அல்லது பொறுப்பான ஆசிரியர் ஒருவரினாலோ சிவப்பு கோடு இடப்படுவது வழக்கம்.
இதன் பின்னர் வருகைதரும் ஆசிரியர்கள் குறுகிய விடுமுறை அல்லது விடுமுறையாக கருதப்படுவது வழக்கமான நடவடிக்கை. ஆனால் குறித்த அதிபர் அதற்கு புறம்பாக வாயிற்கதவைப் பூட்டி வெளியில் விடுவது ஆசிரியர்களை மன ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்பாணம் போன்ற பிரதேசங்களில் இருந்து இரண்டு மூன்று பேரூந்துகள் எடுத்து வருகின்ற ஆசிரியர்கள் சில வேளைகளில் சில நிமிடங்கள் தாமதமாகலாம் இவ்வாறான நேரங்களில் வழமையாக அன்றி ஒரு சில சந்தர்ப்பங்களில் மனிதாபிமானமாக நடந்துகொள்ள வேண்டும் ஆனால் அதனை விடுத்து இவ்வாறு நடந்துகொள்ளவது விசுவாசத்தோடு கற்பிக்கும் ஆசிரியர்களின் செயற்பாடுகளில் பாதிப்பையே ஏற்படுத்தும் என பாடசாலையின் ஆசிரியர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.
Share: