ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்து சென்றால் என்னவாகும் என்று தெரியாமலேயே அப்படி செல்வதற்கு ஆதரவாக மக்களில் பெரும்பாலானோர் ஓட்டு போட்டுள்ளனர்.
கூகுள் டிரெண்ட் மூலம் இந்த தகவல் அம்பலமாகியுள்ளது.
கூகுள் டிரெண்டில் "ஐரோப்பிய யூனியனை விட்டு நாம் வெளியேறினால் என்னவாகும்" என்ற கேள்வியை வாக்கெடுப்பு நடந்த 2 மணி நேரத்திற்கு பிறகு அதிக மக்கள் கூகுளில் கேட்டுள்ளனர்.
இது 250 மடங்கு அதிகம் என்று கூகுள் கூறியுள்ளது.
அதாவது, வாக்கெடுப்பில் ஓட்டு போட்ட பிறகே பெரும்பாலான மக்கள், பிரிந்து சென்ற பிறகு என்னவாகும் என்ற கேள்வியையே கேட்க ஆரம்பித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து இருப்பது தங்களது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல, வளைகுடா நாடுகளில் இருந்து இஸ்லாமிய அகதிகள் தங்கள் நாட்டுக்குள் வருவது அதிகரித்து விட்டது என்ற ஒரே எண்ணம்தான் இப்படி அவர்களை தனிக்குடித்தனத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வைத்துள்ளது என்கிறார்கள் பாதுகாப்பு துறை நிபுணர்கள்.