யாழ்ப்பாண மக்கள் நிலத்தடிநீர், தரை மேல் நீர் தொடர்பில் நீண்டகாலமாக பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில் அப்பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐங்கரநேசன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்குதல் மற்றும் வடிகால் சீரமைப்பு, குளங்களை தூர்வாருதல், புனரமைத்தல் போன்ற முக்கியமான விடயங்கள் பற்றி ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மக்கள் நிலத்தடிநீர், தரை மேல் நீர் தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் யாழ்ப்பாண நிபுணர்களினால் ஆராயப்பட்டு அமைச்சருக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வு இன்னும் இரு வாரங்களில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெற்கில் முக்கியத்துவம் கொடுத்து அபிவிருத்திகள் இடம்பெறுவது போல வடக்கிற்கும் அதிகளவில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டாயப் பணிப்பினை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டதக்கது. இந்த பணிப்பை அங்கஜன் இராமநாதனுக்கும் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது