பல தசாப்தங்களாக குடியிருக்கும் காணியிலிருந்து தம்மை விரட்ட முற்படுவதாக தெரிவித்து கரைச்சி பிரதேச செயலரிற்கு எதிராக குடும்பமொன்று கிளிநொச்சியில் போராட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன் இடம்பெறுகின்றது.
கிளிநொச்சி – ஆனந்தபுரத்தைச் சேர்ந்த முத்தையா விஜயநாதன் என்ற குடும்பத்தவர், மனைவி, சிறு குழந்தைகள் மற்றும் முதிய தாயார் ஆகியோருடன் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 1972 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியில் வசித்துவரும் தம்மை அங்கிருந்து வெளியேற்றி, குறித்த காணியை வேறுநபருக்கு வழங்குவதற்கு பிரதேச செயலாளர் முயற்சிப்பதாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தமது குடியிருப்பு காணிகளை கையகப்படுத்தும் வகையில் பிரதேச செயலர் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள குடும்பத்தினர், பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதங்களையும் பதாகைகளில் காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Showing posts with label Sri lanka Vanni News. Show all posts
Showing posts with label Sri lanka Vanni News. Show all posts
22 Jun 2016
கிளிநொச்சியில் குடும்பமொன்று உண்ணாவிரதம்
VANNIMEDIA14:20:00news in vavuniya, News Vanni, Sri lanka Vanni News, Tamil News in london, United Kingdom Tamil News, வன்னி
பல தசாப்தங்களாக குடியிருக்கும் காணியிலிருந்து தம்மை விரட்ட முற்படுவதாக தெரிவித்து கரைச்சி பிரதேச செயலரிற்கு எதிராக குடும்பமொன்று கிளிநொச்சியில் போராட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன் இடம்பெறுகின்றது.
கிளிநொச்சி – ஆனந்தபுரத்தைச் சேர்ந்த முத்தையா விஜயநாதன் என்ற குடும்பத்தவர், மனைவி, சிறு குழந்தைகள் மற்றும் முதிய தாயார் ஆகியோருடன் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 1972 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியில் வசித்துவரும் தம்மை அங்கிருந்து வெளியேற்றி, குறித்த காணியை வேறுநபருக்கு வழங்குவதற்கு பிரதேச செயலாளர் முயற்சிப்பதாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தமது குடியிருப்பு காணிகளை கையகப்படுத்தும் வகையில் பிரதேச செயலர் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள குடும்பத்தினர், பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதங்களையும் பதாகைகளில் காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.கனடாவில் இலங்கை இளைஞர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!
VANNIMEDIA14:18:00Eelam News, Sri Lanka News, Sri lanka Vanni News, Tamil News in london, Vanni, vavuniya tamil news
கனடாவில் இலங்கையர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று காலை டொரன்டோ பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சீ.பி.சீ செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கனேடிய குடியுரிமையை பெற்ற குறித்த இலங்கையர் தமது இரவு நேர முறைமாற்றல் தொழிலை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் தம்மை, இலங்கையரா? என வினவியதுடன் இலங்கைக்கு திரும்பிச் செல்லுமாறு அச்சுறுத்தியதாகவுதம் தாக்குதலுக்குள்ளான இலங்கையர் குறிப்பிட்டுள்ளார்.
20 வயது மதிக்கதக்க சுரேஸ் ஒம்மி என்ற இந்த இலங்கையர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், உலகின் பாதுகாப்பான நாடுகளில் கனடாவும் ஒன்று என நம்பியிருந்த தமக்கு இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான இலங்கை இளைஞர் தெரிவித்துள்ளார். முதல் குழந்தைப் போராளி!
VANNIMEDIA14:16:00Colombo News, News, news in vavuniya, Sri Lanka News, Sri lanka Vanni News, Tamil Eelam
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளியை அடுத்த இதழில் அறிமுகம் செய்கிறேன் – என்று சென்றவாரம் எழுதியிருந்தேன். இளம் இயக்குநர் உதயபாரதியின் ‘பாலாறு’ திரைப்படத்தைப் பார்த்த உடனேயே ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பின் எதிர்விளைவுதான் அது.
அப்படி நான் எழுதியதற்கும் உடனடி எதிர்விளைவு இருந்தது. விவரம் தெரிந்த நண்பர் ஒருவர், கட்டுரையைப் படித்தவுடனேயே தொடர்பு கொண்டார். தொடக்கக் கால போராளி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவர்தானே அந்தக் குழந்தைப் போராளி’ என்று அவர் கேட்க, ‘இல்லை’ என்று நான் மறுக்க வேண்டியிருந்தது.
‘முதல் குழந்தைப் போராளி’ என்று நான் எழுதவில்லை. ‘தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளி’ என்று தான் எழுதியிருந்தேன். ‘விடுதலைப் புலிகள் இயக்கத்தில் குழந்தைப் போராளிகள் இருந்தார்கள்’ என்று இட்டுக்கட்டிச் சொல்வதிலேயே பொழுதைக் கழிப்பவர்களுக்காகத்தான் அப்படி எழுதினேன். நண்பர்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். நான் எழுதியதிலிருக்கும் எந்த வார்த்தையையும் விட்டுவிடக்கூடாது.
ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு முன்பே, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே, குழந்தைப் போராளிகளின் பெயர்கள் பதிவாகியிருக்கின்றன. பின்னோக்கி இன்னும் இரண்டு எட்டு எடுத்துவைத்தால், வள்ளியம்மை என்கிற குழந்தையின் உருவம் கண்ணில் படுகிறது. மகாத்மா காந்திக்கே விடுதலை உணர்வை ஊட்டிய குழந்தைப் போராளியான தில்லையாடி வள்ளியம்மை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது எவரும்!
‘பலன் எதையும் எதிர்பாராமல், தியாகத்துக்குத் தயாராக இருந்த வள்ளியம்மைதான் முதல்முதலில் எனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்….! என் சகோதரர் லட்சுமிதாஸ் காந்தியின் மரணம் கூட இந்த அளவு என்னை பாதிக்கவில்லை… வள்ளியின் மரணம் உண்மையிலேயே எனக்குப் பேரிடி’ என்று வள்ளியம்மை இறந்தபோது நாத்தழுதழுக்கக் குறிப்பிட்டார் காந்திஜி. ”ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காமல் கடமையைச் செய்தவள் வள்ளியம்மை. இந்தியாவின் புனித மகள் ஒருத்தியை இழந்துவிட்டோம்” என்று, தனது ‘இந்தியன் ஒப்பினியன்’ பத்திரிகையில் உருகி உருகி எழுதினார்.
காந்திஜியின் வார்த்தைகள் அவரது அடிமனத்திலிருந்து வெளிப்பட்டவை என்பதை, தமிழகத்துக்கு அவர் வந்திருந்தபோது உணரமுடிந்தது. தனது ஆதர்சமான வள்ளியை இதயத்தில் சுமந்தபடி, சாலை வசதிகள் அதிகம் இல்லாத தில்லையாடிக்குச் சென்றார். அந்தக் குழந்தை பிறந்த புனித மண்ணில் கண்ணீர் மல்க நின்றார்.
தஞ்சாவூர் அருகில் இருக்கிறது தில்லையாடி கிராமம். அந்த ஊரைச் சேர்ந்தவர், வள்ளியம்மையின் தாயார் மங்களம். புதுச்சேரியைச் சேர்ந்த அவரது கணவர் முனுசாமி முதலியார், மனைவியின் ஊரிலேயே தங்கி, நெசவுத் தொழில் செய்தவர். அந்நிய (பிரிட்டிஷ்) துணி மோகத்தால், உள்ளூர் நெசவுத் தொழில் நசுங்கிவிட, கர்ப்பிணி மனைவியுடன் பஞ்சம் பிழைக்க தென் ஆப்பிரிக்கா சென்றுவிட நேர்ந்தது. தென் ஆப்பிரிக்காவில்தான் பிறந்தாள் – வள்ளியம்மை. தனது உறுதியான போர்க்குணத்தால், அங்கேயே இறந்தாள். இறுதிவரை, அவள் தன் தாய்மண்ணைத் தரிசிக்கவேயில்லை. அந்த மண்ணைத் தானாவது தரிசிக்க வேண்டுமென்று நினைத்திருக்க வேண்டும் காந்திஜி.
தென் ஆப்பிரிக்க வெள்ளையர்களுக்கு, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்கிற பெயரே அருவருப்பாக இருந்த ஒரு தருணத்தில், அவரை முழுமையாகப் புரிந்து வைத்திருந்தாள் வள்ளி. காந்தி நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டங்களை இனவெறி பிடித்த வெள்ளையர்கள் அறவே விரும்பவில்லை. அப்படியொரு போராட்டத்தின் போது, வெள்ளையன் ஒருவன் தனது துப்பாக்கியால் காந்தியைச் சுட முயன்றான். அருகிலிருந்து அதைப்பார்த்த வள்ளி ஓடிவந்து காந்திஜிக்கு முன்னால் நின்றுகொண்டதும், ‘இப்போது சுடு’ என்று அந்தச் சிறுமி சொன்னதைக் கேட்டு வெட்கப்பட்டு அந்த வெள்ளையன் திரும்பியதும் அந்தக் குழந்தைப் போராளியின் வீர வரலாறு.
தென் ஆப்பிரிக்காவில் வசித்த இந்தியர்களுக்கு, அந்த நாட்டின் இனவெறி அரசு மனிதத் தன்மை சிறிதுமின்றி தலைவரி விதித்தது. 1913ல், தலைவரியை எதிர்த்து காந்தி நடத்திய அறப்போர்ப் பேரணியில் தாயுடன் கலந்துகொண்டாள் வள்ளியம்மை. ஜோகன்னஸ்பர்க் நகரில் பேரணி தொடங்கியபோது, முதல் வரிசையில் கஸ்தூரிபா காந்திக்கு அருகில் நின்றிருந்தார்கள், வள்ளியம்மையும் தாயும்! நியூகாசில் நகர் வழியாக பேரணி டிரான்ஸ்வால் எல்லைக்குள் நுழைந்தபோது, பேரணியில் வந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். வள்ளியம்மையும் கைதானாள். அப்போது அந்தக் குழந்தைப் போராளிக்கு, 15 வயது.
காந்திஜி, வள்ளியம்மை உள்பட கைது செய்யப்பட்ட அனைவருக்கும் 3 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மாரிட்ஸ்பர்க் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். அது ஒரு நவீன நரகம். மிகமிக மோசமாகப் பராமரிக்கப்பட்டு வந்த சிறை. படுமோசமான சுகாதாரக் கேடு, சிறையைச் சாக்கடை நிலையில் வைத்திருந்தது.
அப்படியொரு சிறைச் சூழலில், கைது செய்யப்பட்ட பலரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். வள்ளியம்மையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டாள். அவளது உடல்நிலை மோசமடைந்தபடியே இருந்தது. அதைப் பார்த்து அஞ்சிய சிறை அதிகாரி, அவளை விடுவிப்பதாக காந்தியிடம் கூறினான். ‘அபராதம் கட்டிவிட்டு அந்தச் சிறுமி வெளியே போகட்டும்’ என்றான் அவன். அந்த உடல்நிலையிலும் ஓர்மத்துடனிருந்த அந்தக் குழந்தை, அதை ஏற்க மறுத்துவிட்டாள்.
“அபராதம் கட்டுவது சத்தியாகிரகப் போராளிக்கு இழுக்கு. செத்தாலும் சிறையில்தான் சாவேன்” என்று, காந்திஜிக்கே சத்தியாகிரகப் போராட்ட நெறிகள் குறித்து போதித்தாள் அந்தக் குழந்தை. அது காந்திஜியின் இதயத்தில் ஆழப்பதிந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் தான் கைது செய்யப்பட்ட போதெல்லாம், காந்திஜி ஓர்மத்துடனும் உறுதியுடனும் இருக்க முடிந்ததென்றால், வள்ளியம்மை தான் அவருக்கு வழிகாட்டி. வரலாற்றின் வழி நாம் இதை அறிய முடிகிறது.
அபராதம் கட்டி வெளியே போக மறுத்து சிறையிலேயே இருந்த வள்ளியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. கந்தல் துணி மாதிரி கிடந்த அவளது அருகில் அமர்ந்து, ‘கஷ்டமாக இருக்கிறதா’ என்று கவலையுடன் கேட்டார் காந்தி. அந்த நிலையிலும் உறுதியிழக்காமல் பேசினாள் அந்தக் குழந்தை. “தன் தாய்நாட்டின் கௌரவத்தைக் காக்க உயிர் நீப்பதை கஷ்டம் என்று நினைத்து விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா” என்று கேட்டாள் அந்தக் குழந்தைப் போராளி. அடுத்த சில தினங்களில் அவள் இறந்தாள். இறந்தபோது, அந்தச் சிறுமிக்கு பதினாறே வயது!
காந்திஜியின் அந்தப் போராட்டத்தால்தான் தலைவரி ரத்து செய்யப்பட்டதாகச் சொல்கிறது வரலாறு. உண்மையில் அது காந்திஜியின் போராட்டம் மட்டுமல்ல, வள்ளியம்மையின் போராட்டமும்! வெள்ளை அரசாங்கம், அந்தச் சிறுமியின் ஓர்மம் கண்டு அதிர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. “எவருடைய தியாகத்தால் பலன் கிடைத்தது என்று எவராலும் சொல்ல முடியாது. ஆனால், வள்ளியின் தியாகம் நிச்சயமாகப் பலனளித்தது” என்று வெளிப்படையாகச் சொன்னார் காந்திஜி.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வள்ளியம்மை என்கிற சிறுமிக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வையும், அஞ்சாமையையும், ஓர்மத்தையும், உறுதியையும் தான், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தங்கள் தாய்மண்ணுக்காகப் போராடிய எங்கள் ஈழத்து இளைஞர்கள் தாங்கி நின்றார்கள். வள்ளியம்மையைப் போற்றுகிற நாம், ஈழத்தின் வேர்களிலிருந்து வெடித்துக் கிளம்பிய அந்தக் குழந்தைகளை எப்படிப் போற்றாமல் இருக்க முடியும்? அதனால்தான், ‘அது சரி – இது தவறு’ என்று கூசாது பேசுபவர்களின் பெட்டைப் புலம்பல்களைக் காது கொடுத்துக் கேட்கக்கூட கூசுகிறது எனக்கு!
நேருவின் மகள் இல்லை வள்ளியம்மை. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நெசவுத் தொழிலாளியின் மகள். அந்தக் குழந்தை தான், மகாத்மா காந்தியின் போர்க் குணத்தைக் கூர்மைப்படுத்தினாள். பெருமையுடன் இதைப் பறைசாற்றுகிற போது, நேருவின் மகளான இந்திரா பிரியதர்ஷினி என்கிற குழந்தைப் போராளியையும் கவனிக்கத் தவறிவிடக் கூடாது நாம்.
சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில், சிறுமி இந்திரா தலைமையிலான ‘வானர சேனை’ ஈடுபட்ட போது, இந்திராவுக்கு வயது 12 தான்! அந்தச் சிறுமியின் தலைமையில் இயங்கிய வானரங்கள், ஆர்ப்பாட்டங்கள், கொடி ஊர்வலங்கள் என்று கலக்கிக் கொண்டிருந்தன. ஆங்கிலேய அரசுக்கு எதிராக தேசத் தலைவர்கள் எழுதி – தடை செய்யப்பட்ட பிரசுரங்களை – மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர்கள் இந்த வானரங்கள்தான்! 12 வயது இந்திராதான் அவர்களுக்குத் தலைவி என்றால், அதிலிருந்த மற்ற வானரங்களுக்கு என்ன வயது இருக்கும் என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்!
1917 நவம்பர் 19ல் பிறந்தவர் இந்திரா. 1930ல், நேருவின் வீடு ரகசிய போலீசாரின் கடுமையான கண்காணிப்பில் இருந்தது. வீட்டிலிருந்து எதுவும் வெளியில் போகவும் முடியாது, உள்ளே வரவும் முடியாது. அப்படியொரு கடுமையான கண்காணிப்புக்கிடையில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரிவாகவும் விளக்கமாகவும் நேரு எழுதிக் கொடுத்த திட்டம் சிறுமி இந்திரா மூலம் வெளியிலிருந்தவர்களுக்குக் கிடைத்தது. தனது பள்ளிப் புத்தகப் பையில் அதை மறைத்து எடுத்துச் சென்று, சேர வேண்டியவர்களிடம் சேர்ப்பித்தது, அந்தக் குழந்தைப் போராளி தான்!
இந்திராவுக்கு முன்பும் ஒரு வரலாறு இருக்கிறது. ஜான்சிக்கு ராணியாவதற்கு முன், சின்னஞ் சிறுவயதிலேயே ஆயுதப் பயிற்சி பெற்றவள், சிறுமி மணிகர்ணிகா. காலாகாலத்துக்கும் தமிழகப் பெண்களின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழும் வீரமங்கை வேலு நாச்சியார், சின்னஞ்சிறு வயதிலேயே ஆயுதப் பயிற்சி பெறத் தொடங்கியவர்.
உலக வரலாற்றின் வழிநெடுக குழந்தைப் போராளிகளைப் பார்க்க முடிகிறது. நான் அவர்கள் அத்தனைப் பேரையும் நினைவு கூரவில்லை இங்கே! தம் இனத்தின் அடிமை விலங்கொடிக்க எந்த அர்ப்பணிப்புக்கும் தயார் என்கிற ஓர்மத்தைத் தங்கள் கருவிலேயே ஏந்தியிருந்த குழந்தைகளை – சிறுமிகளைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்.
நாயினும் கேடுகெட்ட அடிமைகளாக இருக்க மனமுவந்து முன்வருபவர்களும், தங்களுடைய அடிமைச் சங்கிலியைத் தாங்களே தயாரித்துக் கொள்பவர்களும், இத்தகைய குழந்தைப் போராளிகளைக் கொச்சைப்படுத்துவது மாதிரி பேசுவதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் விடுதலைக்காக மட்டுமல்ல, இவர்களது விடுதலைக்காகவும்தான் போராடியிருக்கிறார்கள் அந்தக் குழந்தைப் போராளிகள்.
முள்ளிவாய்க்காலில், ராணுவ மிருகங்களால் அழைத்துச் செல்லப்படும் ஓர் இளம் பெண் போராளி, தனது பெற்றோரையோ உறவினர்களையோ பார்த்துக் கதறுகிற காட்சி கண்முன் விரிகிற போதெல்லாம் உடைந்து போகிறேன் நான். அந்தப் பிள்ளைகள் மற்றவர் மண்ணைப் பறிப்பதற்காகப் போராடியவர்களில்லை. தங்களது சொந்த மண்ணை மீட்கப் போராடியவர்கள். அந்தப் பிள்ளைகளின் அர்ப்பணிப்பை மறந்துவிட்டு, ‘இனப்படுகொலை’ என்கிற உண்மையை உரைக்கக்கூட அஞ்சி நடுங்குகிற ஒரு கோழைச் சமுதாயமாக நாம் மாறிவிட்டோமே என்கிற மனக் கவலையில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு குழந்தையும் இறைவனின் செய்தியோடு தான் வருகிறது – என்பது எந்த அளவுக்கு உண்மை என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், ‘அடிமையாகவே பிறந்தோம், அடிமையாகவே கிடந்தோம், அடிமையாகவே இறப்போம்’ என்கிற மலட்டு மனப்பான்மையிலேயே மூழ்கியிருந்த மூத்தோருக்கு, ‘விடுதலையின் விலை’ என்ன என்பதை தங்கள் அர்ப்பணிப்பால் உணர்த்திய ஒவ்வொரு குழந்தையும் இறைவனின் செய்தியோடுதான் வந்திருக்க வேண்டும். அந்தச் செய்தியோடு தான் வென்றிருக்க வேண்டும்.
ஒரு பதின்மூன்று வயதுக் குழந்தையின் கையில் பிஸ்கட் கொடுத்து, ‘பாயின்ட் பிளாங்க் ரேஞ்ச்’-ல் அந்தக் குழந்தையை நிற்கவைத்து, ஒரு பொறுக்கி ராணுவம் சுட்டுக் கொல்லலாம்….. அமெரிக்கா முதல் இந்தியா வரை அந்தப் பொறுக்கிகள் மீது விசாரணை வந்துவிடாதபடி பார்த்துக் கொள்ளலாம்……. எத்தகைய துரோகம் இது? ‘குழந்தைப் போராளிகள்’ என்று வாய்கிழியப் பேசியவர்கள், அந்தப் பச்சிளங் குழந்தையின் படுகொலைக்கு நீதி கிடைக்க ஒரு துரும்பையாவது தூக்கி வைத்திருக்கிறார்களா?
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் குழந்தைப் போராளி யார் என்பதைத் தெரிந்துகொள்பவர்கள், விரும்பியேற்ற அந்த ஆபத்தான வாழ்க்கையில் அந்தக் குழந்தைகள் முழுமையாகவும் மனமொன்றியும் தங்களை எப்படி ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்பதை உணர்ந்துகொள்வார்கள்.
“தன் தாய்நாட்டின் கௌரவத்தைக் காக்க உயிர் நீப்பதை கஷ்டம் என்று நினைத்து விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா” என்று கேட்டாளே வள்ளியம்மை…. அந்தக் குழந்தையின் குரல்தான், ஈழத்தில் போராடிய இளைஞர்களின் குரலாகவும் இருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் குழந்தைப் போராளி, ஏழாம் வகுப்பு படிக்கும்போது (12 வயது?) வெடிகுண்டு தயாரித்தவன்…….
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் குழந்தைப் போராளி, 16 வயதிலேயே பாதுகாப்புப் படைகளால் தேடப்பட்டதால் தலைமறைவானவன்……
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் குழந்தைப் போராளி, 18 வயதில் ஒரு வியக்கத்தக்க இயக்கத்துக்கு வித்திட்டவன்……
அவன் –
வேலுப்பிள்ளை பிரபாகரன்.

மாட்டுடன் மோதிய நீதிவானின்….
யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை வீதியில் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.
வாகனம் பயணித்துக்கொண்டிருந்த போது வீதிக்கு குறுக்காக மாடுகள் சென்றதாலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த நீதவானை இலுப்பைக்கடவை பொலிஸார் மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நீதவானின் பாதுகாப்பிற்காக சென்ற பொலிஸ் அதிகாரியும் இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரனைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.29 May 2016
புலிகளின் தலைவர் இன்னும் இறக்கவில்லை – அமைச்சர் விஜயகலா
VANNIMEDIA08:58:00Eelam News, News, news in vavuniya, News Vanni, Sri Lanka News, Sri lanka Vanni News, Tamil News in london, Vanni, வன்னி
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று உயிரிழக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள வார பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியதுடன் அவர் தெரிவித்துள்ள இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் விடுதலைப புலிகளின் தலைவருக்கான மரண அத்தாட்சி சான்றிதழை இன்னும் வழங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மரண அத்தாட்சிப் பத்திரத்தை காட்டினால் மாத்திரமே தன்னால் பிரபாகரன் இறந்து போனார் என்பதை நம்ப முடியும் எனவும் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
25 May 2016
வாள் வெட்டுக் குழு தலைவா .. நீ பல்லாண்டு வாழவேண்டும் என வாழ்த்திய யாழ் மாணர்கள் இவர்கள்
VANNIMEDIA00:31:00Eelam News, News, News Vanni, Sri Lanka News, Sri lanka Vanni News, Vanni News, vavuniya News, vavuniya tamil news, யாழ்
யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள் என பொலிசாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை , "தலைவா நீ 100 வருடம் வாழவேண்டும் என்று வாழ்த்திய இரு மாணவர்களை ஜூன் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு இட்டுள்ளார். யாழில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் நேற்று முன் தினம் இரு சந்தேக நபர்கள் கந்தரோடை பகுதியில் வைத்து சுன்னாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் நீண்ட கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டு இருந்தது. இவர்கள் இருவரும் யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் என்பது அதிர்ச்சி தகவல்.
அதன் போது குறித்த சந்தேக நபர்கள் , யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள் எனத் தேடப்பட்டு வரும் இரு சந்தேக நபர்களான "சன்னா" மற்றும் "தேவா" எனப்படுபவர்களுடன் தொடர்புகளை பேணி வந்ததாகவும் , அவர்களுக்கு கைத்தொலைபேசியில் "எங்கள் அண்ணா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். நாடு நல்லா இருக்க பல்லாண்டு வாழ வேண்டும். எங்கள் உயிரினும் மேலான எங்கள் அண்ணா என குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பியுள்ளதாக நீதவானின் கவனத்திற்கு இந்த குறுந்தகவல்களை பொலிசார் கொண்டு வந்தனர்.
அத்துடன் அவர்களது தொலைபேசியில் இருந்து அவர்கள் வாள் மற்றும் கத்தியுடன் விதம் விதமாக (போஸ்) எடுத்த படங்களையும் பொலிசார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.அதனை அடுத்து இருவரையும் எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார். இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் இரு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
22 May 2016
வவுனியா மாவட்டத்தில் மட்டும் 66 மதுபான விற்பனைக் கூடங்கள்
VANNIMEDIA04:48:00Eelam News, News, news in vavuniya, Sri Lanka News, Sri lanka Vanni News, Tamil Eelam, Tamil News in london, United Kingdom Tamil News, Vanni, vavuniya News, vavuniya tamil news
184 பாடசாலைகள் உள்ள வவுனியா மாவட்டத்தில் மட்டும் 66 மதுபான விற்பனைக் கூடங்கள் உள்ளதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் உள்ள இரு கல்வி வலயங்களிலும் மொத்தம் 184 பாடசாலைகள் உள்ளன.
ஆனால் இங்கு மொத்தமாக 66 மது விற்பனைக்கூடங்கள் இயங்குகின்றன.இவ்வாறு இயங்கும் குறித்த 66 மது விற்பனை மையங்களிலும் மதுபானச்சாலைகள் வகையில் 14 உள்ளன. அதேபோன்று , 11 ரெஸ்ரூரன்ட்களும் இயங்குகின்றன. இவற்றிற்கு அப்பால் உள்ளூர் கள்ளுத் தவறனைகள் 41ம் இயங்குவதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 89 ஆயிரம் மக்கள் தொகையினைக் கொண்ட இம் மாவட்டத்தில் மொத்தமாக 184 பாடசாலைகளும் சகல தரங்களையும் உடைய 14 வைத்தியசாலைகளும் , உள்ள அதேவேளையில் 61 மது விற்பனை நிலையங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் இங்கு மொத்தமாக 66 மது விற்பனைக்கூடங்கள் இயங்குகின்றன.இவ்வாறு இயங்கும் குறித்த 66 மது விற்பனை மையங்களிலும் மதுபானச்சாலைகள் வகையில் 14 உள்ளன. அதேபோன்று , 11 ரெஸ்ரூரன்ட்களும் இயங்குகின்றன. இவற்றிற்கு அப்பால் உள்ளூர் கள்ளுத் தவறனைகள் 41ம் இயங்குவதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 89 ஆயிரம் மக்கள் தொகையினைக் கொண்ட இம் மாவட்டத்தில் மொத்தமாக 184 பாடசாலைகளும் சகல தரங்களையும் உடைய 14 வைத்தியசாலைகளும் , உள்ள அதேவேளையில் 61 மது விற்பனை நிலையங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு வந்த கப்பலில் யுத்த ஆயுதங்கள் ? அதிர்ச்சியில் இலங்கை?
VANNIMEDIA04:43:00Colombo News, Eelam News, News, News Vanni, Sri Lanka News, Sri lanka Vanni News, Tamil Eelam, Tamil News In Colombo, United Kingdom Tamil News, Vanni Media News
இலங்கையில் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவிலிருந்து இரண்டு கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இந்நிலையில் இக்கப்பல்களில் நிவாரணங்களுக்கு பதிலாக ஆயுதங்கள் வந்திரங்கியுள்ளதாக அதிர்ச்சியான தகவல் ஒன்று கசிந்துள்ளது.
அதாவது இவ்வெள்ள அனர்த்தத்தினை தனக்கு சாதமாக்கிக் கொண்டுள்ள இந்தியா மறைமுகமாக கப்பல்களில் ஆயுதங்களை கொண்டவந்துள்ளதாக இரகசிய தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
சிறீலங்காவுக்கான நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கப்பல்கள்!
இந்திய சீனாவிற்கு இடையிலான ஆயுதப்போரில் சீனாவை வெற்றிக்கொள்ள இலங்கையை தளமாகக்கொண்டு செயற்பட இந்தியா ஆரம்பித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அனுதாபத்தின்போது, இந்தியா எப்போதும் இலங்கை மக்களுக்கு உதவத் தயாராக இருப்பதோடு, அவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என இந்திய பிரதமர் தெரிவித்திருக்கின்ற நிலையில் , அவரின் மேற்பார்வையின் கீழ் இவ்செயற்பாடு இடம்பெற்றுவருதாக தகவல் கசிந்துள்ளது.
அத்துடன் சிறீலங்கா அரசாங்கம் உதவுமாறு விடுத்த கோரிக்கையின் பேரிலேயே இந்த இரண்டு கப்பல்களிலும் நிவாரணப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் எதிர்கால வெளிநாட்டு ராஜதந்திர உத்தியாக இச்செயற்பாடு இடம்பெற்றுவருவதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக பல செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வரும் வேளையில், இச்செயற்பாடும் அவற்றில் ஒன்றாக இருக்குமா என்பது தற்போது கேள்வியாகியுள்ளது.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி தனது ராஜதந்திர உறவுகளில் அதிகமாக சீனாவுடனே தனது உறவுகள பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆட்சியினை இழந்தாலும் சீனாவுடனான நட்புறவு தொடர்ந்து வருகின்றமை நாம் அறிந்ததே.
குறிப்பாக இந்திய-சீனப் போருக்கும் முக்கியக் காரணமாகக் கூறப்படுவது எல்லைப் பிரச்சனை. இந்திய-சீன எல்லை என்பது சுமார் 3448 கி.மீ. நீளம் கொண்டது. பொதுவாக, இந்த எல்லைப் பிரச்சனை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கூறப்படுகிறது. அவை…
(அ) மேற்குப் பகுதி: இது ஜம்மு-காஷ்மீருக்கும் ஸிங்ஜியாங்–இற்கும் இடைப்பட்ட பகுதி. சீனா இந்தியாவின் 43000 ச.கி.மீ பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கூறுகிறது. இதில் 5180 ச.கி.மீ. பாகீஸ்தானால் சீனாவிற்குக் கொடுக்கப்பட்டது
(ஆ) மத்தியப் பகுதி: இது ஹிமாசலம், உத்ராகாண்ட் ஆகிய மாநிலங்களும் திபெத்தும் இணையும் எல்லைப் பகுதி. இங்கு ஷிப்கி-லா, கௌரிக், புலம், தக்-லா, பராஹொரி, பிங்ரி-லா, லப்தால், சங்கா ஆகியப் பகுதிகளை இந்தியா-சீனா இரண்டும் சொந்தம் கொண்டாடின.
(இ) கிழக்குப் பகுதி: சீனா இந்தியாவின் அருணாசலப்பிரதேசத்தின் 90000 ச.கி.மீ. பகுதியை (முக்கியமாக தவாங், பும்-லா, அஸப், லோ-லா ஆகியவை; இதில் தவாங் பகுதி, சியாசின் போல இராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது) தனதாகச் சொந்தம் கொண்டாடியது.
இவ்வாறு எல்லைப்பிரச்சினையில் பாகிஸ்தானை விட சீனாவின் மீதே அதிகரித்த மோதலை வளர்த்துக்கொண்டு வருகின்றது இந்தியா.
தீராத பிரச்சினையாக வலுவெடுத்துள்ள இப்பிரச்சினைக்கு தற்போது இலங்கையை தளமாக இந்தியா பயன்படுத்தும் விடயம் உண்மையென்றால் எதிர்காலத்தில் பாரிய பின் விளைவுகளை இலங்கை எதிர்நோக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
குறிப்பாக சீனா இலங்கையில் ஏற்கனவே மகிந்தவின் ஆட்சியில் பல முதலீடுகளையும், ஒப்பந்தங்களையும் மேற்க்கொண்டுள்ளது. தொடர்ந்து வந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் சீனாவுடனான உறவு தவிர்க்க முடியாமல் போனமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அமைவிடத்தை தீர்மானித்துள்ள மேற்குலக நாடுகள் இலங்கையை ஒரு போருக்கான பொருத்தமான தளமாக அடையாளமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் அமெரிக்காவும் அடங்கும்.
இந்நிலையில் நிவாரணம் என்ற போர்வையில் இரண்டு கப்பல்களும் ஆயுதங்களை கொண்டுவந்துள்ளமை உண்மையானால் இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறியே.
காரணம் தற்போது ஆயுதங்கள் ரீதியிலும், பொருளாதாரம் ரீதியிலும் முன்னிலையில் உள்ள சீனாவிற்கு இலங்கையின் செயற்பாடு பாரிய அதிர்ப்பதியினை ஏற்படுத்தும்.
குறிப்பாக அமெரிக்காவே வியந்துப்போயுள்ள சீனாவின் வளர்ச்சியில் இலங்கை ஒரு விடயமே இல்லை.
ராஜதந்திர உறவுகளை பொருத்தமான முறையில் மேற்கொள்ளுவது கட்டாயமானதாகும்.
சுனாமியில் பல உயிர்களை இழந்தது இலங்கை.
வெள்ளப்பபெருக்கு , மண்சரிவு என பல உயிர்களை இழந்தது இலங்கை
யுத்தம் என்ற போர்வையில் பல உயிர்களை இழந்தது இலங்கை.
தற்போது ஆயுத கடத்தல் என்ற விடயம் மட்டும் உண்மை எனின் எதிர்காலத்தில் இலங்கையின் அமைவிடமே இல்லாமல் போகும் நிலை வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இவற்றில் முதலில் பாதிக்கப்படுவது வடக்கு பிரதேசமாகவே இருக்கும், ஈழத்தமிழர்களின் அழிவிலும் முன்னின்று செயற்பட்ட இந்தியாவிற்கு இலங்கை செய்யும் கைமாறாக இவ் ஆயுதம் இறக்கப்பட்ட விடயம் என சிலர் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆயுத பலத்தில் ராஜாவாக திகலும் சீனாவிற்கு இலங்கையை சுக்கு நூறாக்க ஒரு நிமிடம் போதும் இதுவே உண்மை……….இதற்கான ஆரம்பத்தை இலங்கையே ஏற்படுத்திக்கொடுக்கிறதா? இலங்கைக்கான அழிவுக்குழியை இலங்கையே வெட்டுகிறதா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது……..
பெரு வெள்ளம்: பால்மா இன்றி தவிக்கும் கொழும்பு
VANNIMEDIA04:34:00Colombo News, Eelam News, News, Sri Lanka News, Sri lanka Vanni News, Vanni, Vanni Media News, யாழ், வன்னி
களனி கங்கையின் பெருக்கெடுப்பால், கொழும்பின் தொட்டலங்க, சேதவத்தை, மட்டக்குளியின் சில பகுதிகள் தொடர்ந்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்தும் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள், உடை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா, சிறுவர் உணவுகளுக்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசங்களை, களனி ஆற்றிலிருந்து பெருக்கெடுக்கும் வெள்ள நீர் நேற்று சுமார் மூன்றரை அடிக்கு மேல் மூழ்கடித்திருந்த நிலையில் அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பாடசாலைகள் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக சமைத்த உணவும், சிலருக்கு சமைப்பதற்கான அரிசி உள்ளிட்ட பொருட்களும் தடையின்றி பலராலும் வழங்கப்பட்டு வருகிறன.
எனினும் அந்த மக்களின் உடைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் மாற்று உடைக்காக மக்கள் காத்திருப்பதுடன், நூர்றுக்கணக்கான கைக் குழந்தைகளுக்கு தேவையான பால் மாவினை பெற்றுக்கொள்வதிலும் பாதிக்கப்பட்டோர் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
தொட்டலங்க பகுதியில் வெள்ள்த்தால் வீடுகளை இழந்துள்ள மக்கள், இலங்கை – ஜப்பான் நட்புறவு பாலத்தின் அருகே முகாமிட்டு தங்கியுள்ளனர். பலர் தமது வீடுகளின் மேல் மாடிகளிலும், சிலர் உறவினர், அயலவர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
குறிப்பாக வெள்ள நீரில் மூழ்கியுள்ள வீடுகள் பலவற்றில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடும் மக்கள் அதனால் வீடுகளை விட்டு வெளியேறுவது குறித்து பலமுறை சிந்திப்பதாக கூறுகின்றனர். இதனால் பலர் வெள்ள நீருக்கு மத்தியிலும் தமது குடியிருப்புக்களிலேயே முடங்கிக்கிடக்கின்றனர்.
எவ்வாறாயினும் பல பகுதிகளிலிருந்து உணவினைக் கொண்டு வரும் நிவாரண பணியாளர்கள் அவற்றை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டோருக்கு வழங்கி வருகின்றனர்.
எனினும் நிவாரணப் பணியாளர்கள் மற்றும் தனவந்தர்களிடம் குழந்தைகளுக்கான பால்மா, மாற்று உடை, மருந்து மற்றும் பம்பஸ் உள்ளிட்டவற்றை பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
16 May 2016
யாழில் சீரற்ற காலநிலை – 1168 குடும்பங்களைச் சேர்ந்த 5047 பேர் பாதிப்பு
VANNIMEDIA15:08:00Eelam News, News, News Vanni, Sri Lanka News, Sri lanka Vanni News, Tamil News in london, United Kingdom Tamil News, Vanni, Vanni Media News, Vanni News, யாழ்
யாழில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 1168 குடும்பங்களைச் சேர்ந்த 5047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இதன்போது யாழ்ப்பாண நகரப்பகுதி, நல்லூர், சண்டிலிப்பாய், வேலனை, உடுவில், தெல்லிப்பளை, பருத்தித்துறை உள்ளிட்ட பல பகுதிகளையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த பகுதிகளிலுள்ள தற்காலிக வீடுகள் பகுதியளவில் சேதடைந்திருக்கின்றன. மேலும், இரண்டு வீடுகள் முழு அளவில் சேதமடைந்துள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதிகளவான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
15 May 2016
இலங்கையில் சீரற்ற காலநிலை: அவசர அறிவித்தல்….!
VANNIMEDIA12:44:00Colombo News, News, Sri Lanka News, Sri lanka Vanni News, Tamil Eelam, Tamil News In Colombo, United Kingdom Tamil News, Vanni, Vanni Media News, Vanni News, யாழ்
யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடும் மழை பொழியும்!! சூறாவளி அபாயம்
யாழ்ப்பாணம் உட்பட்ட வடபகுதி மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடும் காற்றுடன் கூடிய கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அருகில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் தற்போது நாட்டிற்குள் நுழைந்துள்ளது எனவும் இது சில வேளை புயலாக மாறி கடும் காற்றுடன் கூடிய கனமழையை உருவாக்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதே வேளை
நுவரெலியா, கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட பலபொக்குன பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்று காரணமாக மரம் ஒன்று வீடுகளின் மேல் சரிந்து வீழ்ந்ததால் இரு வீடுகளும் ஒரு லொறியும் சேதமடைந்துள்ளது.
இதனால் குறித்தப் பகுதியில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு திருத்த பணிகளை கொத்மலை மின்சார சபை மேற்கொண்டு வருகின்றது.
அனர்த்தம் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை கொத்மலை பிரதேச சபை அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் பொலிஸார், கிராம சேவகர் மற்றும் பொது மக்கள் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும் சீரற்ற காலநிலையால் கொழும்பில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாணந்துறை பகுதியில் மினி சூறாவளி ஒன்று ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த மினி சூறாவளியால் சுமார் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதில் யாருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சீரற்ற காலநிலை: அவசர அறிவித்தல்….!
நாட்டில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும், அவசர அனர்த்த நிலைமைகளை உடனடியாக அறியத்தருமாறும் அவசர அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு மக்களிடம் கோரியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் மேலதிக பணிப்பாளர், பிரிகேடியர் கே.ஜெ.ஜெயவீரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அனர்த்தம் தொடர்பில் கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம்.
இராணுவம் – 011 2 434 251 / 011 3 818 578
கடற்படை – 011 2 445 368 / 011 2 212 230 / 011 2 212 231
விமானப்படை – 011 2 343 970 / 011 2 343 971
பாணந்துறையில் கடும் காற்று: 30 வீடுகள் சேதம்
VANNIMEDIA12:38:00Eelam News, News, News Vanni, Sri Lanka News, Sri lanka Vanni News, Tamil News in london, United Kingdom Tamil News, Vanni News, வன்னி
பாணந்துறையில் வீசிய கடும் காற்றினால் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், தொடர் மழை காரணமாக பாணதுறை – பழைய காலி வீதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
14 May 2016
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக மஹிந்த அணி போர்க்கொடி!
VANNIMEDIA15:49:00Eelam News, News, News Vanni, Sri Lanka News, Sri lanka Vanni News, Tamil News in london, Vanni, Vanni News, வன்னி
“நாட்டை சூறையாடிய பயங்கரவாதிகளை மே 18இல் நினைவுகூர வடக்கு மாகாண சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு அரசும் இணக்கப்பாடு தெரிவித்துள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.” – இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மே 18ஆம் திகதி முள்ளிவாய்காலில் வடக்கு மாகாண சபை நினைவேந்தல் நிகழ்வை நடத்தவுள்ளது. இதற்கு அரசும் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையிலேயே தினேஷ் குணவர்தன எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு மஹிந்த ஆட்சியில் நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது மீண்டும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டும் வகையில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
எதிர்வரும் மே 18ஆம் திகதி வடக்கு மாகாண சபை முள்ளிவாய்காலில் நினைவேந்தலை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளமைக்கு அரசு பூரண அனுமதி வழங்கியுள்ளது. வடக்கு மாகாண சபையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் சமஷ்டிக் கோரிக்கைக்கும் அரசின் பூரண ஆதரவு உள்ளது. நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்கும் வடக்கு மாகாண சபை தொடர்பில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” – என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மே 18ஆம் திகதி முள்ளிவாய்காலில் வடக்கு மாகாண சபை நினைவேந்தல் நிகழ்வை நடத்தவுள்ளது. இதற்கு அரசும் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையிலேயே தினேஷ் குணவர்தன எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு மஹிந்த ஆட்சியில் நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது மீண்டும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டும் வகையில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
எதிர்வரும் மே 18ஆம் திகதி வடக்கு மாகாண சபை முள்ளிவாய்காலில் நினைவேந்தலை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளமைக்கு அரசு பூரண அனுமதி வழங்கியுள்ளது. வடக்கு மாகாண சபையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் சமஷ்டிக் கோரிக்கைக்கும் அரசின் பூரண ஆதரவு உள்ளது. நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்கும் வடக்கு மாகாண சபை தொடர்பில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” – என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான்
VANNIMEDIA15:46:00Eelam News, News, News Vanni, Sri Lanka News, Sri lanka Vanni News, Tamil Eelam, Tamil News in london, United Kingdom Tamil News, Vanni Media News
•இவர்கள் பிழைக்க தெரியாதவர்கள் இல்லை!
செய்தி- லண்டன் வந்த ஜனாதிபதி மைத்திரிக்கு கொட்டும் மழையிலும் தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவர்கள் விரும்பியிருந்தால்,
•வேலைக்கு போய் ஆகக் குறைந்தது 50 பவுண்ஸ்( 10 ஆயிரம் ரூபா) உழைத்திருக்க முடியும்
•அல்லது தியேட்டருக்குப் போய் சூரியா படம் பார்த்திருக்க முடியும்
•அல்லது பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு சொப்பிங் போயிருக்க முடியும்
•அல்லது குடும்பத்துடன் கோயிலுக்கு போயிருக்க முடியும்
•அல்லது வீட்டில் இருந்துகொண்டு டிவி யில் சுப்பர் சிங்கர் பார்த்திருக்க முடியும்
.
•அல்லது தண்ணியடித்து பாபர்கியூ போட்டு சாப்பிட்டிருக்க முடியும்
இதையெல்லாம் செய்யாமல் கொட்டும் மழையில் ஜனாதிபதி மைத்திரிக்கு எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்?
இவர்கள் மற்றவர்கள் போல் பிழைக்க தெரியாதவர்களா?
இல்லை. நிச்சயமாக இல்லை.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நம்பிக்கையுடன் போராடுகிறார்கள்.
பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்தாலும் தமிழ் இனம் அடிமையாக உறங்கிக் கிடக்காது என்பதை காட்டுகிறார்கள்.
ஒரு சிலருக்கு எதிர்க்ட்சி தலைவர், மாகாண முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை கொடுத்தாலும் மொத்த தமிழ் இனத்தையும் வாங்க முடியாது என்பதை காட்டுகிறார்கள்.
புலத்தில் இருந்தாலும் தமது உறவுகளுக்காக போராட தயங்கமாட்டோம் என்பதைக் காட்டுகிறார்கள்.
நியாயம் கிடைக்கும் வரை தமிழன் ஓயமாட்டான் என்பதை முழு உலகிற்கும் காட்டுகிறார்கள்.
இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் இவர்கள் சொல்லியிருக்கும் செய்தி நிச்சயம் கனதியானது.
போராட்டம் இன்றேல் வாழ்க்கை இல்லை- தோழர் லெனின்.
செய்தி- லண்டன் வந்த ஜனாதிபதி மைத்திரிக்கு கொட்டும் மழையிலும் தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவர்கள் விரும்பியிருந்தால்,
•வேலைக்கு போய் ஆகக் குறைந்தது 50 பவுண்ஸ்( 10 ஆயிரம் ரூபா) உழைத்திருக்க முடியும்
•அல்லது தியேட்டருக்குப் போய் சூரியா படம் பார்த்திருக்க முடியும்
•அல்லது பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு சொப்பிங் போயிருக்க முடியும்
•அல்லது குடும்பத்துடன் கோயிலுக்கு போயிருக்க முடியும்
•அல்லது வீட்டில் இருந்துகொண்டு டிவி யில் சுப்பர் சிங்கர் பார்த்திருக்க முடியும்
.
•அல்லது தண்ணியடித்து பாபர்கியூ போட்டு சாப்பிட்டிருக்க முடியும்
இதையெல்லாம் செய்யாமல் கொட்டும் மழையில் ஜனாதிபதி மைத்திரிக்கு எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்?
இவர்கள் மற்றவர்கள் போல் பிழைக்க தெரியாதவர்களா?
இல்லை. நிச்சயமாக இல்லை.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நம்பிக்கையுடன் போராடுகிறார்கள்.
பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்தாலும் தமிழ் இனம் அடிமையாக உறங்கிக் கிடக்காது என்பதை காட்டுகிறார்கள்.
ஒரு சிலருக்கு எதிர்க்ட்சி தலைவர், மாகாண முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை கொடுத்தாலும் மொத்த தமிழ் இனத்தையும் வாங்க முடியாது என்பதை காட்டுகிறார்கள்.
புலத்தில் இருந்தாலும் தமது உறவுகளுக்காக போராட தயங்கமாட்டோம் என்பதைக் காட்டுகிறார்கள்.
நியாயம் கிடைக்கும் வரை தமிழன் ஓயமாட்டான் என்பதை முழு உலகிற்கும் காட்டுகிறார்கள்.
இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் இவர்கள் சொல்லியிருக்கும் செய்தி நிச்சயம் கனதியானது.
போராட்டம் இன்றேல் வாழ்க்கை இல்லை- தோழர் லெனின்.
தாயகத்தின் இறுதிவீரன் இருக்கும்வரை விழமாட்டார் வீரப்புலிகள்
தமிழீழ தேசிய தலைவரின் சிந்தனைகளில் இருந்து…
எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றானர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.
எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு. எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீ சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
10 May 2016
ஆசிரியர்களுக்கு கிளிநொச்சி அதிபர் கொடுத்த அதிரடி தண்டனை
நல்லது கிளிநொச்சி அதிபர் மீது பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளது இதற்கு பலர் பல அர்த்தங்களைக் கூற முற்படலாம் அதிபர் தனது கடமையைச் செய்வதில் என்ன தவறு முதலாவது அப்படி அதிபர் செய்த விடயம் ஆசிரியைகளைின் மனங்கள் பாதிக்கும் படி அமைந்திருக்குமாக இருந்தால் குறித்த அதிபர் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நேரத்தை பின்பற்றியமையில் குற்றங் காண்பது சரியா….
ஒரு ஆசியர் நியமனத்தின் போது ஆசிரியர் ஒருவர் நியமனம் பெறும் வரை எங்கு செல்லவும் தயார் எங்கும் பணி செய்வோம் என வரிக்கு வரி கூறுவது யாவரும் அறிந்தது அப்படி இருக்கையில் நேரத்தை உரிய முறையில் பின்பற்றாமை சரியாயின் அதிபர் செய்தமை தவரா அதிபர் யாருக்காக இந்த முடிவை எடுத்தார்.
யாழ்ப்பானத்தில் இருந்து ஒரு ஆசிரியர் ஏனைய மாவட்டங்களுக்கு செல்வது தாமதமாக இருந்தால் பாடசாலை நேரம் காலை 7.30மணிக்கு ஆரம்பமாகும் பாடசாலைக்கு உதாரணமாக ஒரு ஆசிரியர் காலை 8.30க்கு சென்று பாடசாலை முடிவதற்கு முன் துார இடம் என்பதால் பாடசாலை முடிவதற்கு முன் செல்வதை அதிபர் கண்டிப்பது தவறா ஒவ்வெரு பாடசாலையும் மாணவர்களுக்காகவா அல்லது ஆசிரியர்களுக்காகவா குற்றச்சாட்டுகளுக்கு முன் எதிர்காலத்தை ஆராய வேண்டியது அனைவரதும் க டமை அல்லவா…..
இன்று அதிகார வர்க்கம் சாமானிய மனிதர்களை பார்ப்பதை விடுத்து அதிகார வர்க்கத்தைப் பார்க்கும் துர்ப்பாக்கிய நிலை உள்ளமை ஏழை மக்களுக்கு ஆபத்தான விடயமாக கருதப் படுகிறது.
சொந்த ஊரில் எந்த ஆசிரியரின் பிள்ளை படிக்கிறது அல்லது தான் கற்பிக்கும் பாடசாலையில் எத்தனை ஆசிரியரின் பிள்ளை படிக்கிறது அப்படி இருந்திருக்குமாக இருந்திருந்தால் இவ் அதிபரின் நடவடிக்கைக்கு கைதட்டல் கிடைத்திருக்கும் அப்படி இல்லையே….
இவ் அதிபர் போன்று நேரக் கட்டுப்பாட்டை வட-கிழக்கின் அனைத்து அதிபர்களும் பின்பற்றுவார்களாக இருந்தால் தமிழரின் கல்வியின் நிலை 1970களை விட பல் மடங்கு வீச்சாக மாறும்.
இப்படியான அதிபர்கள் நிர்வாகம் முறையாக கடைப்பிடிப்பார்களாக இருந்தால் கல்வி – ஒழுக்கம் பல மடங்கு முன்னகரும் என்பதில் மாற்றமில்லை விமர்சனங்கள் பிரதானம் அதற்காக முறையற்ற விமர்சனங்கள் தகுமா இவ் அதிபரின் நடவடிக்கையில் குறை காண்பதற்கு முன் தமிழ் சமூகத்தின் நிலையை சிந்திப்பது காலத்தின் கட்டாயம்
வெளிநாடுகளில் நேரக்கட்டுப்பாடு எவ்வளவு அழகாக உள்ளது அது மட்டுமா எவ்வளவு முன்னேற்றம் அதனை எம்மவர்கள் நடைமுறைப்படுத்த முனைவது தவறா
கடந்த திங்கட்கிழமை இடம் பெற்ற சம்பவம் கீழ் உள்ளது
கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்றைய தினம் மூன்று ஆசிரியர்கள் சில நிமிடங்கள் தாமதமாக பாடசாலைக்கு வந்தமையினால் பாடசாலையின் பிரதான வாயிற்கதவை பூட்டி வெளியில் விட்டுள்ளார் அதிபர்.
இதனால் பிந்தி வந்த மாணவர்களுடன் ஆசிரியர்களும் பரிதாபமாக பாடசாலைக்கு வெளியில் நின்ற சம்பவம் பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இன்று காலை ஏற்பட்ட இச் சம்பவத்தினால் பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் அதிபருடன் முரண்பட்ட நிலையில் வாயிற் கதவு திறக்கப்பட்டு ஆசிரியர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் வழமையான நடவடிக்கைக்கு அமைவாக நாளாந்த வரவு பதிவேட்டில் காலையில் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திற்கு அதிபரினாலோ அல்லது பொறுப்பான ஆசிரியர் ஒருவரினாலோ சிவப்பு கோடு இடப்படுவது வழக்கம்.
இதன் பின்னர் வருகைதரும் ஆசிரியர்கள் குறுகிய விடுமுறை அல்லது விடுமுறையாக கருதப்படுவது வழக்கமான நடவடிக்கை. ஆனால் குறித்த அதிபர் அதற்கு புறம்பாக வாயிற்கதவைப் பூட்டி வெளியில் விடுவது ஆசிரியர்களை மன ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்பாணம் போன்ற பிரதேசங்களில் இருந்து இரண்டு மூன்று பேரூந்துகள் எடுத்து வருகின்ற ஆசிரியர்கள் சில வேளைகளில் சில நிமிடங்கள் தாமதமாகலாம் இவ்வாறான நேரங்களில் வழமையாக அன்றி ஒரு சில சந்தர்ப்பங்களில் மனிதாபிமானமாக நடந்துகொள்ள வேண்டும் ஆனால் அதனை விடுத்து இவ்வாறு நடந்துகொள்ளவது விசுவாசத்தோடு கற்பிக்கும் ஆசிரியர்களின் செயற்பாடுகளில் பாதிப்பையே ஏற்படுத்தும் என பாடசாலையின் ஆசிரியர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.




















