22 Jun 2016

மாட்டுடன் மோதிய நீதிவானின்….

யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை வீதியில் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது. வாகனம் பயணித்துக்கொண்டிருந்த போது வீதிக்கு குறுக்காக மாடுகள் சென்றதாலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த நீதவானை இலுப்பைக்கடவை பொலிஸார் மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நீதவானின் பாதுகாப்பிற்காக சென்ற பொலிஸ் அதிகாரியும் இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரனைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share:

Related Posts: