10 May 2016

ஆசிரியர்களுக்கு கிளிநொச்சி அதிபர் கொடுத்த அதிரடி தண்டனை

நல்லது கிளிநொச்சி அதிபர்  மீது பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளது இதற்கு பலர் பல அர்த்தங்களைக் கூற முற்படலாம் அதிபர் தனது கடமையைச் செய்வதில் என்ன தவறு முதலாவது அப்படி அதிபர் செய்த விடயம் ஆசிரியைகளைின் மனங்கள் பாதிக்கும் படி அமைந்திருக்குமாக இருந்தால் குறித்த அதிபர் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நேரத்தை பின்பற்றியமையில் குற்றங் காண்பது சரியா….
ஒரு ஆசியர் நியமனத்தின் போது ஆசிரியர் ஒருவர் நியமனம் பெறும் வரை எங்கு செல்லவும் தயார் எங்கும் பணி செய்வோம் என வரிக்கு வரி கூறுவது யாவரும் அறிந்தது அப்படி இருக்கையில் நேரத்தை உரிய முறையில் பின்பற்றாமை சரியாயின் அதிபர் செய்தமை தவரா அதிபர் யாருக்காக இந்த முடிவை எடுத்தார்.
யாழ்ப்பானத்தில் இருந்து ஒரு ஆசிரியர் ஏனைய மாவட்டங்களுக்கு செல்வது தாமதமாக இருந்தால் பாடசாலை நேரம் காலை 7.30மணிக்கு ஆரம்பமாகும் பாடசாலைக்கு உதாரணமாக ஒரு ஆசிரியர் காலை 8.30க்கு சென்று பாடசாலை முடிவதற்கு முன் துார இடம் என்பதால் பாடசாலை முடிவதற்கு முன் செல்வதை அதிபர் கண்டிப்பது தவறா ஒவ்வெரு பாடசாலையும் மாணவர்களுக்காகவா அல்லது ஆசிரியர்களுக்காகவா குற்றச்சாட்டுகளுக்கு முன் எதிர்காலத்தை ஆராய வேண்டியது அனைவரதும் க டமை அல்லவா…..
இன்று அதிகார வர்க்கம் சாமானிய மனிதர்களை பார்ப்பதை விடுத்து அதிகார வர்க்கத்தைப் பார்க்கும் துர்ப்பாக்கிய நிலை உள்ளமை ஏழை மக்களுக்கு ஆபத்தான விடயமாக கருதப் படுகிறது.
சொந்த ஊரில் எந்த ஆசிரியரின் பிள்ளை படிக்கிறது அல்லது தான் கற்பிக்கும் பாடசாலையில் எத்தனை ஆசிரியரின் பிள்ளை படிக்கிறது அப்படி இருந்திருக்குமாக இருந்திருந்தால் இவ் அதிபரின் நடவடிக்கைக்கு கைதட்டல் கிடைத்திருக்கும் அப்படி இல்லையே….
இவ் அதிபர் போன்று நேரக் கட்டுப்பாட்டை வட-கிழக்கின் அனைத்து அதிபர்களும் பின்பற்றுவார்களாக இருந்தால் தமிழரின் கல்வியின் நிலை 1970களை விட பல் மடங்கு வீச்சாக மாறும்.
இப்படியான அதிபர்கள் நிர்வாகம் முறையாக கடைப்பிடிப்பார்களாக இருந்தால் கல்வி – ஒழுக்கம் பல மடங்கு முன்னகரும் என்பதில் மாற்றமில்லை விமர்சனங்கள் பிரதானம் அதற்காக  முறையற்ற விமர்சனங்கள் தகுமா இவ் அதிபரின் நடவடிக்கையில் குறை காண்பதற்கு முன் தமிழ் சமூகத்தின் நிலையை சிந்திப்பது காலத்தின் கட்டாயம்
வெளிநாடுகளில் நேரக்கட்டுப்பாடு எவ்வளவு அழகாக உள்ளது அது மட்டுமா எவ்வளவு முன்னேற்றம் அதனை எம்மவர்கள் நடைமுறைப்படுத்த முனைவது தவறா
 கடந்த திங்கட்கிழமை இடம் பெற்ற சம்பவம் கீழ் உள்ளது 
கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்றைய தினம் மூன்று ஆசிரியர்கள் சில நிமிடங்கள் தாமதமாக பாடசாலைக்கு வந்தமையினால் பாடசாலையின் பிரதான வாயிற்கதவை பூட்டி வெளியில் விட்டுள்ளார் அதிபர்.
இதனால் பிந்தி வந்த மாணவர்களுடன் ஆசிரியர்களும் பரிதாபமாக பாடசாலைக்கு வெளியில் நின்ற சம்பவம் பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இன்று காலை ஏற்பட்ட இச் சம்பவத்தினால் பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் அதிபருடன் முரண்பட்ட நிலையில் வாயிற் கதவு திறக்கப்பட்டு ஆசிரியர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் வழமையான நடவடிக்கைக்கு அமைவாக நாளாந்த வரவு பதிவேட்டில் காலையில் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திற்கு அதிபரினாலோ அல்லது பொறுப்பான ஆசிரியர் ஒருவரினாலோ சிவப்பு கோடு இடப்படுவது வழக்கம்.
இதன் பின்னர் வருகைதரும் ஆசிரியர்கள் குறுகிய விடுமுறை அல்லது விடுமுறையாக கருதப்படுவது வழக்கமான நடவடிக்கை. ஆனால் குறித்த அதிபர் அதற்கு புறம்பாக வாயிற்கதவைப் பூட்டி வெளியில் விடுவது ஆசிரியர்களை மன ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்பாணம் போன்ற பிரதேசங்களில் இருந்து இரண்டு மூன்று பேரூந்துகள் எடுத்து வருகின்ற ஆசிரியர்கள் சில வேளைகளில் சில நிமிடங்கள் தாமதமாகலாம் இவ்வாறான நேரங்களில் வழமையாக அன்றி ஒரு சில சந்தர்ப்பங்களில் மனிதாபிமானமாக நடந்துகொள்ள வேண்டும் ஆனால் அதனை விடுத்து இவ்வாறு நடந்துகொள்ளவது விசுவாசத்தோடு கற்பிக்கும் ஆசிரியர்களின் செயற்பாடுகளில் பாதிப்பையே ஏற்படுத்தும் என பாடசாலையின் ஆசிரியர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.
Share: