15 May 2016

கொழும்பு நீரில் மூழ்கியது

கொழும்பில் இன்று பெய்துவரும் அடை மழையினால் நகரின் பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், சில பாதைகளின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மருதானை, வெள்ளவத்தை, தும்முள்ளை சந்தி ஆகிய பகுதிகளிலுள்ள பாதைகள் பல இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, அம்பலாங்கொட மற்றும் பலப்பிட்டி ஆகிய பிரதேசங்களிலும் தெற்கின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்று மாலை முதல் இன்று நண்பகல் வேளை வரையில் மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share: