14 May 2016

ஆபாச படங்களில் உள்ள மந்திரிகள் விபரத்தை வெளியிடுவேன் சரிதா நாயர் மிரட்டல்

கேரளாவில் ‘டீம் சோலார்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்த சரிதா நாயர் மற்றும் அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர், வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு சூரிய மின்சக்தி வசதியை ஏற்படுத்தி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டனர்.
முதல்௲மந்திரி உம்மன்சாண்டி வரை பல்வேறு அரசியல்வாதிகளின் பெயரை பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததால், இது கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பாக சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், கேரள தலைமை செயலக ஊழியர் ஜோப்பன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை கமிஷன்
இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த கடந்த 2013௲ம் ஆண்டு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
விசாரணை கமிஷன் முன்பு ஆஜரான சரிதா நாயர் கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறினார். ‘சோலார் பேனல்’ விவகாரத்தில் முதல்-மந்திரி உம்மன்சாண்டிக்கு தான் கமிஷன் கொடுத்ததாகவும் மேலும் அவர் தன்னுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறினார்.இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சரிதாநாயரின் குற்றச்சாட்டை உம்மன் சாண்டி மறுத்தார். தேர்தல் நேரத்தில் அரசியல் சதி காரணமாக எதிர்கட்சிகளின் கைபாவையாக சரிதாநாயர் புகார் கூறுவதாக கூறினார். மேலும் சரிதாநாயர் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்தார்.
இந்த நிலையில் சிவ ராஜன் விசாரணை கமிஷன் முன்பு நேற்று சரிதாநாயர் ஆஜரானார்.சரிதாநாயர் பாலியல் புகார் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
இது பற்றி அவர் கூறும் போது, அரசு விருந்தினர் மாளிகை, கிளிப் ஹவுஸ் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தன்னுடன் தங்கிய எம்.பி.க்கள், மந்திரி கள் ஆகியோர் தன்னுடன் உல்லாசமாக இருந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றின் ஆடியோ, வீடியோ தொடர்பான சி.டி.க்களையும் கமிஷன் முன்பு கொடுத்துள்ளேன். தேவைப்பட்டால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் தயாராக உள்ளேன். விசாரணை கமிஷன் அனுமதித்தால் என்னோடு வீடியோவில் இருக்கும் நபர்கள் பற்றிய விவரத்தை இன்று வெளியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Share: