16 May 2016

திமுக ஆட்சியை பிடிக்கும்- நியூஸ்நேஷன், ஆக்ஸிஸ், ஏபிபி, சாணக்யா எக்ஸிட்போல்; அதிமுகதான்-சிவோட்டர்!

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளான எக்ஸிட் போல் முடிவுகளில் 4 திமுகவுக்கு ஆதரவாகவும் 1 அதிமுகவுக்கு ஆதரவாகவும் வெளியாகி உள்ளன. 

தமிழகத்தின் 232 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. கனத்த மழை பெய்தபோதும் சுமார் 70% வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்று மாலை வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன. 

மொத்தம் 5 நிறுவனங்கள் வெளியிட்ட இந்த எக்ஸிட் போல் முடிவுகளில் திமுகவுக்கு 4; அதிமுகவுக்கு 1 ஆதரவாக இருக்கிறது.


Share: