முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் தீவிரமாக நடக்கின்றன. தமிழகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவுக்காகவே இந்த முயற்சி.
தேர்தல் ஆணையம், ஊடக நிறுவனங்களுக்கு இணையாக இணையத்தில் இளம் படைப்பாளிகளும் தனித்துவத்துடன் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ‘Lets vote’ என்ற இந்த வீடியோ குறும்படைப்பு நம்மை வெகுவாக கவனத்தை ஈர்க்கிறது. தேர்ந்த திரைப்படைப்புக் குழு ஒன்றுதான் இந்த வீடியோவைத் தயாரித்து இருக்கிறதோ என்று எண்ணத் தோணுது. அந்த அளவுக்கு நேர்த்தியான படைப்பு இது.
எந்தப் பிரச்சார நெடியும் இல்லாமல், காட்சிகள் – உணர்வுகள் மூலம் நம்மைத் தட்டியெழுப்புகிறது இந்த படைப்பு. குறிப்பாக, வசனங்களைத் தவித்து திரை மொழியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது தனிச் சிறப்பு.
நறுக்கென எடிட் செய்து இயக்கியிருக்கிறார் சர்வேஷ்.
காட்ஸன். ஸோலாவின் ஒளிப்பதிவு ஈர்க்கத்தக்க வகை. ரெஷ்வின். அபே-யின் இசை துருத்தாமல் உணர்வுகளைத் தூண்டவல்லது. இதில் நடித்தவர்கள் புரொஃபஷன்ல் ஆர்டிஸ்டாகவே பங்காற்றியுள்ளனர். மொத்தத்தில் இது பார்க்கவும் பகிரவும் வேண்டிய படைப்பு