22 Jun 2016

நாளை -பிரித்தானியாவில் உள்ள வெளிநாட்டு தமிழர்களின் நிலை என்ன என்று தெரியும்

நாளைய தினம்(23) பிரித்தானியா ஐரோப்பிய நாடுகளோடு இணைந்திருப்பதா ? இல்லை வெளியேறுவதா ? என்ற வாக்கெடுப்பு நடைபெறுகிறது. வெளியேறவேண்டும் என்ற கோஷம் பலமாக உள்ளது. ஆனால் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து தேசத்தில் உள்ள மக்கள் இணைந்திருக்க வேண்டும் என்று எண்ணுவதனால், சிலவேளைகளில் வெறும் 5 அல்லது 6 சத விகித வாக்குகளால், இணைந்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை வெல்லலாம் என்று எதிர்பார்கப்படுகிறது. இருப்பினும் வெளியேறவேண்டு என்ற கோரிக்கை வென்றால், பிரான்ஸ் , ஜேர்மன் மற்றும் ஏனைய ஐரோப்பிய போன்ற நாடுகளில் இருந்து பிரித்தானியா வந்து குடியேறியுள்ள பல மில்லியன் மக்கள் மீண்டும் தமது சொந்த நாட்டுக்குச் செல்ல நேரிடும். அவர்களுக்கு இதுவரை காலமும் பிரித்தானிய அரசால் கொடுக்கப்பட்டுவந்த அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. இருப்பினும் கல்வி கற்க்க என வந்த மாணவர்களை உடனடியாக வெளியேற்ற மாட்டோம் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. எது எவ்வாறாயினும் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரித்தானியா வந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் நிலையும் தற்போது கேள்விக் குறியாக மாறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் துருக்கியும் இணைந்துகொள்ள பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. அப்படி துருக்கி இணைந்துகொண்டால். துருக்கியில் வசிக்கும் சுமார் 2 மில்லியன் மக்கள் உடனடியாக பிரித்தானியாவுக்குள் வரும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே பிரித்தானியாவில் உள்ள ஆங்கில மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளார்கள். ஆங்கில மக்களை பொறுத்தவரை அவர்கள் இலங்கையர்களுக்கோ இல்லை இந்திய மக்களுக்கோ அச்சம் கொள்வது இல்லை. ஏன் எனில் இலங்கையர்கள் ஆனாலும் சரி, இல்லை இந்திய வம்சாவளி மக்கள் ஆனாலும் சரி அவர்கள் வேலைசெய்து , இன் நாட்டில் கடுமையாக உழைத்து வாழ்பவர்கள் என்பது யாவரும் அறிந்த விடையம். ஆனால் பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் வெள்ளை இனத்தவர்கள், பிரித்தானிய வளங்களை சுரண்டும் நோக்கில் இங்கே வருவது , பெரும் ஆபத்தை தோற்றுவிக்கிறது. அத்தோடு அது பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்கிறது என்று ஆங்கிலேயர்கள் கருதுகிறார்கள்.
Share: