29 May 2016

தொடரும் இராணுவ கெடுபிடி! தவிக்கும் முல்லைத்தீவு மக்கள்!

இலங்கையின் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு , வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மக்கள் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர். இவர்கள் 2014ஆம் ஆண்டு கோப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் மீளக் குடியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் இராணுவத்தினர் தமது பாரம்பரிய காணிகளை கையகப்படுத்தி அவர்களுக்கு தேவையான கட்டடங்களை நிர்மாணித்து வருவதாக தற்போது தகவல்  வெளிவந்துள்ளது. குறிப்பாக பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மாதிரிக் கிராமத்தில் குடியமர்த்தப்பட்டமையால் தமது வாழ்வாதாரமும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே வேளை பல குடும்பங்கள் தமது காணிகளை மீட்ப்பதற்காக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் எனினும் இராணுவத்தினர் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை கைவிடவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Share: